பேருந்தில் புட்போர்டு அடித்த அமைச்சர்கள்

 
k

 ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியில் இருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப் பட்டிருக்கிறது.  கடந்த 30 ஆம் தேதியன்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அதை திறந்து வைத்தார்.

 இந்நிலையில் இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே .என். நேரு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் பேருந்துகளுக்கு முன்பாக கொடியசைத்து சத்திரம் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

new

 இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு,  மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான்,  சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி,  அப்துல் சமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 நிகழ்ச்சியை துவக்கி வைப்பதற்காக வந்த அமைச்சர்கள் கே. என். நேரு,  அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் அரசு பேருந்தின் படியில் நின்று பயணம் செய்தனர். பின் பக்க படிக்கட்டிகளில் தொண்டர்கள் புட்போர்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.   இதை அங்கிருந்தோர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தார்கள் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் அமைச்சர்கள் படியில் நின்று பயணம் செய்தது அங்கிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

 இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.