நரிக்குறவர் குழந்தைகள் பஸ் மறியல் போராட்டம்

 
bu

நரிக்குறவர் குழந்தைகள் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதுக்குடியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் வசித்து வருகிறார்கள்.  இப்பகுதியில் பள்ளிக்கூடங்கள் இல்லாததால் அருகில் உள்ள ராயப்பட்டி, மலையேறிப்பட்டி கிராமங்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று படித்து வருகிறார்கள்.

b

 இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் 5 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் உள்ள பள்ளிக்கு அரசு பேருந்தில் தினமும் சென்று வருகிறார்கள்.   ஆனால் இந்த தடத்தில் இயங்கும் அரசு பேருந்துகள் நரிக்குறவர் பேருந்து நிறுத்தத்தில் மட்டும் பேருந்தை நிறுத்தாமல் சென்று விடுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள்.

 பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் , கூலி வேலைக்குச் செல்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

 இந்த நிலையில் வேறு வழியின்றி பள்ளி மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பஸ் மறியலில் ஈடுபட்டதால் புதுக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.