கொரோனா பயத்தால் ஒரு குடும்பமே விஷம் குடித்த பரிதாபம்

 
mi

கொரோனா பயத்தால் ஒரு குடும்பமே விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்ததால் தாயும் மகனும் உயிரிழந்திருக்கிறார்கள்.   மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  மதுரை மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.

 அம்மாவட்டத்தில் கல்மேடு எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஜோதிகா.   இவரது கணவர் பிரிந்து சென்று விட்டதால் மூன்று வயது மகன்,  தாய் லட்சுமி , தம்பி சிபிராஜ் ஆகியோருடன் வசித்து வந்திருக்கிறார்.  

தற்போது உடல்நிலை அவதிப்பட்டு வந்த ஜோதிகாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது.  இதனால் வீட்டிலிருந்த அனைவரும் பதட்டம் அடைந்திருக்கிறார்கள்.   எங்கே தங்களுக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று அவர்கள் அச்சத்திலேயே நடுங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். 

ma

இதை அடுத்து கொரோனா வந்த ஜோதிகாவும் அவரது தாயாரும் தம்பியும் கொரோனாவினால் சாவு வந்து பறிபோவதை விட தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள்.  அதன்படி சாணி பவுடரை அரைத்து ஜோதிகா, லட்சுமி ,சிவராஜ் மூன்று பேரும் குடித்திருக்கிறார்கள்.  3 வயது சிறுவனையும் குடிக்க வைத்திருக்கிறார்கள்.

 சாணி பவுடர் குடித்த ஜோதிகாவும் அவரது 5 வயது மகன் ரித்தீஷ் உயிரிழந்திருக்கிறார்கள்.   உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த லட்சுமியையும் சிபிராஜையும் அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.   அவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கொரோனா பயத்தினால் ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயன்ற சம்பவம்,  அதில் தாய்-மகன் பலியான பரிதாபம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.