’’சூர்யா நல்லவரா? அவருக்கு ஓட்டு போடுவீர்களா? ’’

 
சூ

ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யா - பாமகவின் மோதல் வலுத்து வருகிறது.   இதில், பாமவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,   வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டம் இல்லாமல் நீங்கள் போற்றி வணங்கும் தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று முழக்கமிட்ட தேவர் திருமகனாரின் படம் இருந்தால் நீங்களும், தேவர் சமுதாயமும் சும்மா இருப்பீர்களா? அல்லது கொங்கு மக்களால் கடவுளுக்கு இணையாக வழங்கப்படும் வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலை அவர்களின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாட்காட்டி இருந்திருந்தால் அவர்கள் கொதித்து எழுந்து இருக்க மாட்டார்களா? அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? படைப்புச் சுதந்திரம் என்று சும்மா இருந்து இருப்பீர்களா? என்று  அன்புமணி சரமாரி கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

ச்

இந்நிலையில், பிரபல மனநல மருத்துவர் ஷாலினி இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்.  அவர்,   ‘’தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையிலும் பெரும்பாலான படங்களில் தலித்துகளே வில்லன்களாக சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.  இன்னும் பல சாதியின் பெயர்களையும் அப்பட்டமாக சொல்லிய வில்லன் கதாபாத்திரங்களும் தமிழ் சினிமாக்களில் வந்திருக்கின்றன. 

 ஆனால் அது அரசியலுக்கான விவாதப் பொருளாக இதுவரையிலும் மாறியது இல்லை .  இயல்புக்கு மாறாக ஜெய்பீம் திரைப்படம் தான் அரசியல் ஆக்கப்பட்டிருக்கிறது.   இதுபோல் எல்லோரும் பிரச்சனை எழுப்பினால் அதற்கு ஒரு முடிவே இருக்காது’’என்று தெரிவித்திருக்கிறார்.

ச்ச்

மேலும்,  ‘’கோவிலுக்கு பணம் கொடுப்பதை விட மருத்துவமனைகள் கட்ட பள்ளிக்கூடங்கள் கட்ட பணத்தை செலவு செய்யலாம் என்று பேசினார் சூர்யாவின் மனைவி ஜோதிகா.  அதை தொடர்ந்து சனாதன மதவாதிகளால் அவர் குறி வைக்கப்பட்டு வருகிறார்.  இந்த நிலையில் சூர்யாவுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.   எதிர்காலத்தில் சூர்யா அரசியலுக்கு வந்தால் செல்வாக்கு மிகுந்த தலைவராக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.  அவர் மீது மக்களுக்கு நல்ல அபிப்ராயம் இருக்கிறது.   அவர் அரசியலுக்கு வந்தால் உடனே வெற்றிபெற வாய்ப்புகளும் இருக்கின்றன.   அதனால் தான் சூர்யாவை மட்டம் தட்டி வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.  அவரை எதிர்க்கின்றார்கள்’’ என்கிறார்.

அவர் மேலும்,   ’’பொதுமக்களிடத்தில் சூர்யா நல்லவரா? அவருக்கு ஓட்டு போடுவீர்களா? என்று கேட்டால் ஆம் என்று தான் எல்லோரும் சொல்லுவார்கள்.  இதனால் தான் அவரை பார்த்து அஞ்சுபவர்கள் அவரை தாக்குவோம் என்று சொல்கிறார்கள். 

அ

 சூர்யா மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாமக சொல்கிறது.  ஒரு திரைப்படத்தின் கதாசிரியர் தான் மன்னிப்பு கேட்கலாம்.  இயக்குனர் மன்னிப்பு கேட்கலாம் . ஆனால் படத்தில் நடித்த நடிகர் சூர்யா எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.  அவரை மன்னிப்பு கேட்க வைத்தால் அது அவருக்குத்தான் சாதகமாக முடியும்.  இன்னும் அவருக்கு விளம்பரம் அதிகமாக கிடைக்கும்.  இப்போதே சர்வதேச அளவில் அவர் ஸ்டாராக மாறிவிட்டார்.  அவரை பணிய வைத்தால் பாமகவுக்கு அவமானம்தான் மிஞ்சும்’’ என்று தெரிவித்துள்ளார்.