அவர் உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் இல்லை - அதனால் சிறையிலடைப்பு

 
u

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினி உதவியாளர் என்று சொல்லிக்கொண்டு இளம்பெண்ணை  ஏமாற்றி பண மோசடி செய்து மிரட்டி வந்த  ராஜேஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் செவ்வாத்தூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேன்மொழி.   இவர் கடந்த 2018ம் ஆண்டில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.  அப்போது  சென்னையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாக சொல்லி பணம் வாங்கியிருக்கிறார்.   பல்வேறு தவணைகளாக 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றிருக்கிறார்.  அதுபோல அரசு வேலை வாங்கித்தருகிறேன் என்று பலரிடமும் பணம் வசூலித்து ராஜேஷிடம் கொடுத்திருக்கிறார் தேன்மொழி.

te

 பல லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்ட ராஜேஷ் அரசு வேலை வாங்கித் தராததால் பணமும் கொடுத்தவர்கள் தேன்மொழிக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள்.  தன் பணத்தையும் இழந்து நின்றதால் மன உளைச்சலுக்கு ஆளான தேன்மொழி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதன்பின்னரும் நிலைமை மோசமானதால் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார் தேன்மொழி.

 புகார் கொடுத்த தகவல் அறிந்ததும் தேன்மொழியை தொடர்பு கொண்டு,  தான் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஆள் என்றும் உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் என்றும் சொல்லி மிரட்டி இருக்கிறார்.    இந்த ஆடியோ ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சரக டிஐஜி பாபு இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வந்தார்.  இது தெரிந்து ராஜேஷ் மறுபடியும் தேன்மொழியை  மிரட்டி  வந்த நிலையில் போலீஸ் அவரை தூக்கியது.  விசாரணையில் அவர் எந்த கட்சியையும் சேர்ந்தவர் இல்லை .  அவர் உதயநிதி ஸ்டாலின் உதவியாளரும் இல்லை என்று தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.