உழவனின் நண்பனுக்கு நன்றி சொன்ன எச்.ராஜா

 
ஹ்

 தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப்பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.    விவசாயத்தில் விவசாயிகளுக்கு பக்கபலமாக இருக்கும் உயிரினங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக மாட்டுப்பொங்கல்,  குறிப்பாக கால்நடை உழவனின் நண்பர்களுக்கு நண்பன் என்று சொல்லப்படும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் தான் இந்த மாட்டுப் பொங்கல்.

ஹ்

நேற்று  பெரும் பொங்கலுக்கு மறுநாள் இன்று இந்த  மாட்டுப்பொங்கல் தினத்தில் மாடுகளை குளிப்பாட்டி மாலை சூட்டி அலங்கரித்து சர்க்கரைப் பொங்கல் வெண்பொங்கல் செய்து அவற்றை மாடுகளுக்கு முன்பு வைத்து வழிபட்டு மாடுகளுக்கும் உணவாக  வழங்கப்பட்டன.

 பூஜை முடிந்ததும் மாடுகளை அழைத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர் .  கால்நடைகளை ஆலயங்களுக்கும் அழைத்துச் சென்று வழிபட்டு வந்தனர்.  மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவை போற்றும் வகையில் இந்த மாட்டுப் பொங்கல் தினம் அமைந்தது.

 மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான விளையாட்டுகள் நடைபெற்றன.  ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலும் நடைபெற்றது.   இதுமட்டுமல்லாது வழுக்கு மரம் ஏறுதல்,  உறியடித்தல் , சைக்கிள் பந்தயம்,  ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளும் ஆங்காங்கே நடைபெற்றன.

ர்

பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா மாடுகளுக்கு மரியாதை செய்தார்.  அது குறித்து அவர்,  ‘’நமக்கு விவசாயத்தில் உதவியாக இருக்கின்ற கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது.  உழவனின் நண்பன் கால்நடைகளுக்கு நாம் நன்றியினை செலுத்திக் கொள்கிறோம். இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.