மன்னித்துவிடுங்கள்; இனி கணவன், மனைவியாக வாழ போகிறோம்..

 
m

கல்லூரிக்குச் சென்ற மகளை காணோம் என்று ஊரெல்லாம் தேடிய பெற்றோருக்கு பேரதிர்ச்சி அளித்திருக்கிறது அந்த போட்டோ.   பெற்றோரிடம் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் ஊரை விட்டு ஓடி காதலனை மணந்துகொண்டு அந்த போட்டோவை பெற்றோருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் மகள்.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் அடுத்த கரவிளாகம் பகுதியை சேர்ந்தவர் அந்த மாணவி,ல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். அவர் தந்தை  டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.  இவருக்கு இரண்டு மகள்கள்.   18 வயது ஆகும் இரண்டாவது மகள்தான் அந்த மாணவி.  இவர்  அதே பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபரை காதலித்து வந்திருக்கிறார்.   அந்த வாலிபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

mm

 தங்களின் காதலுக்கு பெற்றோர் நிச்சயம் சம்மதிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டு அந்த மாணவி காதலனுடன் ஓடிச்சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார்.   இதையடுத்து கல்லூரிக்கு சென்று விட்டு வருகிறேன் என்று சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.   பதறிப்போன பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் மார்த்தாண்டம் போலீசில் தங்கள் மகளை யாரோ கடத்தி விட்டார்கள் என்று புகார் அளித்திருக்கிறார்கள்.

 போலீசாரும் மாணவியை தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.    இந்த நிலையில் பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு போட்டோ வந்து இருக்கிறது.  அது அவர்களது மகள் அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்ளும் புகைப்படம் . காதலுடன் தற்போது கோழிக்கோட்டில் இருப்பதாகவும் அங்கு இருக்கும் கிருஷ்ணன் கோயிலில் மாலை மாற்றி தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார் .  மேலும் ,,  இனி கணவன்-மனைவியாக வாழப் போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

 திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.   அப்பா அம்மா என்னை மன்னித்துவிடுங்கள் என்று அவர் கேட்டிருக்கிறார்.   

 காதலனுடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசாரிடம் தெரிவிக்க,  மார்த்தாண்டம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.