சாதியை இழிவுபடுத்தினேனா? விஜய்சேதுபதி ஐகோர்ட்டில் விளக்கம்

 
vs

நடிகர் விஜய்சேதுபதி தொடர்ந்த வழக்கு விசாரணை ஜனவரி 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

 பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்தபோது திரையுலகைச் சேர்ந்தவர்கள் மகாத்மா காந்தி என்பவர் விஜய் சேதுபதியும் அவரது நண்பரும் சேர்ந்து தன்னை சாதியைச் சொல்லி இழிவுபடுத்தி பேசியதாகவும் தாக்கியதாகவும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  

hr

இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.   மூன்று கோடி ரூபாய் விஜய்சேதுபதி இழப்பீடு தரவேண்டும் என்று இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

 இதை அடுத்து தன் மீது தொடரப்பட்ட இந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் தொடர்ந்திருந்தார்.   இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.   விஜய்சேதுபதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  மகா காந்தி தொடர்ந்துள்ள வழக்கு விளம்பரம் நோக்கத்துடன் அதேநேரம் இழப்பீடு கேட்டு தொடரப்பட்டு  இருக்கிறது என்று வாதிட்டார்.

 இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி.