சூர்யாவால் உருவாக்கப்பட்டவர் - அன்புமணியால் உருவாக்கப்பட்டவர் : அனல் தெறிக்கும் மீம்ஸ்கள்

 
ச

 அகரம் அறக்கட்டளை மூலமாக படிப்பு திறமை இருந்தும் படிக்க வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார் சூர்யா.  அவரின் அறக்கட்டளை மூலமாக உதவி பெற்ற ஏழை மாணவி கிருஷ்ணவேணி மருத்துவம் படித்து என்று ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் பணிபுரிந்து வருகிறார்.  இதுகுறித்து வலைத்தளங்களில்   பலரும் மீம்ஸ்கள் பதிவிட்டு வருகின்றனர்.  அந்த மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

ஜ

 மனுஷன் நிஜத்தில் பண்ணதத்தான் படத்தில் பண்ணி இருக்காரு.. இப்ப அந்த சீன் இன்னும் அழகா தெரியுது இல்ல.. என்கிறது ஒரு மீம்ஸ்.    ஜெய்பீம் படத்தில் உள்ள ஒரு காட்சியையும் கிருஷ்ணவேணி பள்ளி மாணவி தோற்றத்தில் ஏழை மாணவியாக இருக்கும் தோற்றமும்,   இப்போது ராணுவத்தில் உயர்பதவியில்  அவர் கம்பீரமாக அமர்ந்திருக்கும் அந்த காட்சியும் அந்த மீம்ஸில் இடம்பெற்றுள்ளன.

இச்

பாமகவினர் மிரட்டலுக்கு சூர்யாவுக்கு எதிராக நிறைய ஆதரவுக்கரங்கள் நீளுவதால்,   ’’இந்த மனசுக்குத் தான் உங்களுக்குக் இத்தனை கோடி மக்கள் ஆதரிக்கிறார்கள்’’ என்கிறது ஒரு மீம்ஸ்.

 அதேபோல்,  ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அன்புமணி முதலடி எடுத்து வைக்க,  பாமகவினரும் வன்னியர் சமூகத்தினரும் தொடர்ந்து சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இப்போது மாவட்டம்தோறும் வழக்குகளும் கொடுத்து வருகின்றனர்.  ஆர்ப்பாட்டம் தொடங்கிவிட்டனர். 

ஆச்ட்

 இந்த நிலையில்,   ’’சூர்யாவால் உருவாக்கப்பட்டவர் இன்று டாக்டர் கிருஷ்ணவேணி ’’என்றும்,  ‘’ அன்புமணியால் உருவாக்கப்பட்டவர் கல்வீச்சு கந்தன்’’ என்றும் சூர்யா-  அன்புமணி இருவரையும் வைத்து மீம்ஸ்கள் வலைத்தளங்களில் பறக்கின்றன.  இந்த ஒற்றை மீம்ஸில்தான் அதிகம் அனல் தெறிக்கிறது.