மாஸ்க் பரோட்டாவை தொடந்து மஞ்சப்பை பரோட்டா

 
pஅ

கொரோனா மாஸ்க் பரோட்டா, கொரோனா போண்டாவை தொடந்து ‘மஞ்சப்பை பரோட்டா’விலும் மக்களுக்கான விழிப்புணர்வில் பங்கெடுத்திருக்கிறது மதுரை சுப்பு ஓட்டல்.  மஞ்சப்பை பரோட்டா வாடிக்கையாளர்களிடையே அதிகம் வரவேற்பினை பெற்றிருக்கிறது.

 பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது என்பதை கருத்தில் கொண்டு துணிப் பைகளுக்கு மீண்டும் திரும்பும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மீண்டும் மஞ்சப்பை உத்தியை அரசு கையில் எடுத்திருக்கிறது.  தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட மீண்டும் மஞ்சப்பை மக்கள் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  

ப்ப்

அரசு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்களும் வியாபாரிகளும் மஞ்சப்பை இயக்கத்தை ஊக்குவித்து வருகிறார்கள்.  மஞ்சப்பை கொண்டு வந்தால் காய்கறியில் விலை குறைப்பு,  மஞ்சள் பையுடன் வந்தால்  இட்லி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் , மஞ்சப்பை கொண்டு வந்து பிரியாணி ஒன்று வாங்கினால் இன்னொன்று பிரியாணி இலவசம் என்றும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் தந்து ஊக்குவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மதுரையில் உள்ள பிரபல ஹோட்டல் மஞ்சப்பை இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.   மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள சுப்பு ஹோட்டலில் பார்சல் சாப்பாடு வாங்க வருவார்களுக்கு இலவசமாக மஞ்சப்பை வழங்கி வருகின்றார்கள்.   மேலும்,  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பரோட்டாவை மஞ்சப்பை போல் வடிவமைத்து,   மஞ்சப்பை பரோட்டாவை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

  மஞ்சப்பை பரோட்டா மட்டுமல்லாது கொரோனா  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முகக்கவசங்களையும் இலவசமாக வழங்கி வருகிறார்கள்.  வாடிக்கையாளர்களிடையே  இதனால் இந்த ஓட்டல் அதிக கவனம் பெற்றிருக்கிறது.   

ம

 இது ஹோட்டலில் கடந்த ஆண்டில் கொரோனாவை முன்னிட்டு மாஸ்க் வடிவிலான புரோட்டாவை  தயாரித்து விற்பனை செய்து வந்தனர். அதுவும் வாடிக்கையாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது.  அதேபோல் கொரோனா போண்டாவும்  வாடிக்கையாளர்களிடையே அதிக கவனம் பெற்றது.  

மஞ்சப்பை பரோட்டா குறித்த பதிவுகள் வலைத்தளங்களிலும் பிரபலமாகி வருகின்றது.   இந்த சுப்பு ஓட்டலை நடத்திவரும் சகோதரர்கள் நவநீதன்,குணாவுக்கு  வலைத்தளங்களில் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.