நண்பன் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவன் தற்கொலை

 
t

 நண்பன் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  திருவள்ளூர் மாவட்டம் திருப்பாசூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர்  மாவட்டம் ஆட்சியர் அலுவலம் அருகே திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டை மாநகர் பகுதியை சேர்ந்த மில்டன் என்கிற 17வயது அப்பு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.  

t

அரக்கோணம் புளியமங்கலம் பகுதியை சேர்ந்த உதயகுமார் மில்டனுக்கு நெருங்கிய நண்பர். 11ம் வகுப்பு வரைக்கும் இருவரும் ஒன்றாக படித்து வந்திருக்கிறார்கள்.  கடந்த 5ம் தேதி அன்று  உதயகுமார் உயிரிழந்துவிட்டார். 

நண்பன் உதயகுமார் உயிரிழந்தது முதல் சோகத்தில் இருந்து வந்துள்ளார் மில்டன்.  இந்த நிலையில் இன்று அதிகாலையில் மில்டன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  இதையடுத்து மில்டனின் சடலத்தை மீட்ட காவல் துறையினர்  திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மில்டனை பரிசோதித்த மருத்துவர்கள்  வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 நண்பன் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருப்பாசூர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.