சாப்பாடுக்கு யாராவது உதவி செய்வார்களா? கண்கலங்கும் நடிகை ரங்கம்மாள்

 
rஅ

 ஐநூறு திரைப்படங்களுக்கு மேல் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வந்த ரங்கம்மாள் வறுமையின் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் கைக்குட்டை விற்று  காலத்தை கடத்தி வருவதாக கடந்த 2018-ஆம் ஆண்டில் செய்திகள் வெளியானது.   அப்போது பலரும் அவருக்கு சிறுசிறு உதவிகள் செய்து வந்தனர்.   இந்நிலையில் முதுமையின் காரணமாகவும் வறுமையின் காரணமாகவும் அவரால் அந்த வேலையையும்  செய்ய முடியாததால் சொந்த ஊரான கோயம்புத்தூர் அடுத்த தெலுங்குபாளையத்திற்கே சென்றுவிட்டார்.   

ர்ர்

சொந்த வீடு, நல்ல சாப்பாடு இல்லாமல் அங்கே முதுமையிலும் வறுமையிலும் வாடி கொண்டிருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

 சின்னப்பா தேவர் தயாரிப்பில் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான விவசாயி படத்தின் மூலம் அறிமுகமானவர் ரங்கம்மாள்.   தமிழில் மட்டுமல்லாது மலையாளம் , இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.   பல நடிகைகளுக்கும் டூப் போட்டு நடித்திருக்கும் இவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் தனிமுத்திரை பதித்தவர்.

ரன்

 சென்னை வடபழனியில் உள்ள குமரன் காலனியில் வசித்து வந்த இவர்,   எம்ஜிஆர். சிவாஜி,  ரஜினி ,  கமல் ,அஜித், விஜய், விஷால், உதயநிதி ஸ்டாலின் என்று ஏராளமான நடிகர்கள் படங்களில் நடித்திருக்கிறார்.   இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் தன்  பிள்ளைகளை வளர்க்க செலவாகி விட்டதால் சேமிப்பு எதுவும் இல்லை என்று கண் கலங்கி இருக்கிறார்.

ஆனால் அந்த பிள்ளைகளை தன்னை கவனிக்காமல் கைவிட்டு விட்டனர் என்றும் சொல்லு கலங்குகிறார்.  சினிமா வாய்ப்புகளும் இல்லாததால், கைக்குட்டை விற்று பிழைத்தேன்.  இப்போது உடல் முடியாததால் எதுவுமே செய்ய முடியவில்லை என்று வருந்தி இருக்கிறார். 

ம்ம்

இந்த நிலையில்தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மெரினாவில் அவர் பெற்றிருக்கிறார் இப்போது அதற்கு முடியாத அளவிற்கு முதுமை வந்துவிட்டது அவர் கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த தெலுங்குபாளையம் ஆன தனது சொந்த கிராமத்திற்கு சென்று அங்கே ஒரு சிறு குடிசை வீட்டில்  தங்கியிருக்கிறார்.

இறுதிக்காலத்தை எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில்,   தங்குவதற்கு ஒரு வீடு சாப்பிடுவதற்கு உணவு கிடைத்தால் போதும்.  அதற்கு யாராவது உதவி செய்தால் புண்ணியமாக போகும் என்று கண்கலங்கி கூறியிருக்கிறார் ரங்கம்மாள்.