பேச மறுத்த காதலன் - காவல் நிலையத்தை பதற வைத்த இளம்பெண்

 
பொ

 காதலன் பேச மறுத்துவிட்டதால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருக்கிறார் இளம்பெண்.   இத்தோடு அந்த இளம்பெண் இரண்டாவது முறையாக தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்று தெரியவந்திருக்கிறது.    காவல்நிலைய வளாகத்திலேயே விஷம் குடித்து  பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

 அந்த இளம்பெண் நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அந்த இளம்பெண் கல்லூரி மாணவி அவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார் .   காதலர்கள் இருவரும் தினமும் கல்லூரியில் பார்த்தும் பேசியும் செல்போன் மூலமாக தங்களது காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.   கல்லூரி படிப்பு முடிந்ததும் வாலிபருக்கு போலீஸ் வலை கிடைத்திருக்கிறது.   

போ

 காதல் ஜோடியின் காதல் மட்டும் ரகசியமாகவே இருந்து வந்திருக்கிறது.   இந்த காதல் விவகாரம் இளைஞரின் வீட்டிற்கு தெரிய வர அவரை கண்டித்திருக்கிறார்கள். இதனால் காதலியை பார்ப்பதையும் அவருடன் செல்போனில் பேசுவதையும் நிறுத்தி இருக்கிறார் .  

 காதலன் பேசாததால் மனவேதனை அடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.   பெற்றோர் உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.   பின்னர் இதுதொடர்பாக இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அழைத்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.  

இளம்பெண்ணை சில மாதங்களுக்குப் பிறகு திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் சமாதானம் அடைந்து இருக்கிறார்.  அதன்பின் மீண்டும் தொடர்ந்து இருக்கிறது இவர்களது காதல்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் இளைஞர் பேசுவதை நிறுத்தி இருக்கிறார்.  இதனால் விரக்தி அடைந்த இளம் பெண் நாகர்கோவிலில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னை தன் காதலனுடன் சேர்த்து வைக்கும்படி  புகார் கொடுத்திருக்கிறார்.    வாலிபரை போலீசார் விசாரணைக்காக அழைத்து இருக்கிறார்கள் .  

 இருவரும் சம்பவத்தன்று போலீஸ் நிலையத்திற்கு வந்த போது,   போலீஸ் நிலைய வாசலில் நின்று கொண்டிருந்த இளம்பெண் திடீரென்று அங்கு உள்ள பெட்டி கடை அருகே ஓடிச்சென்று அங்கு ஒளித்து வைத்திருந்த விஷத்தை அருந்தி விட்டு வந்திருக்கிறார்.   இதைப்பார்த்துவிட்ட போலீசார் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.