“திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
Jul 20, 2020, 12:47 IST1595229472000
கந்த சஷ்டி விவகாரத்தில் கறுப்பர் கூட்டத்திற்கு திமுக ஆதரவு அளிப்பதாக மு.க ஸ்டாலின் பெயரில் போலியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் இந்துக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த இப்படி அற்பத்தனமான செயலை செய்கின்றனர் என்று திமுகவினர் குற்றச்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி நடக்கிறது. இந்து விரோதிகள் என கூறி திமுகவின் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என்பது அரதப்பழசான சிந்தனை.
பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பி ஓபிசி இட ஒதுக்கீட்டை ஒழிக்க முயற்சி நடக்கிறது. எது நடந்தாலும் திமுகவை தொடர்புபடுத்தி பழி சுமத்த ஆள் பிடித்துள்ளனர்”என்று பதிலடி கொடுத்துள்ளார்.