பெண் சிஷ்யரை திருமணம் செய்து கொண்ட அகோரி - திருச்சி பரபரப்பு

 
a

அகோரி பாபா மணிகண்டன் தனது பெண் சிஷ்யரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் திருச்சி அரியமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிய மங்கலத்தைச் சேர்ந்தவர் பாபா மணிகண்டன்.   இவர் இளம் வயதிலேயே காசிக்குச் சென்று அங்கேயே அகோரிகளுடன் தங்கியிருந்து பயிற்சிகளை கற்றவர் சில ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னுடன் இருந்த சில அகோரிகளையும் அழைத்துக்கொண்டு அரியமங்கலம் திரும்பினார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தங்கியிருந்து வந்த பாபா மணிகண்டன் கடைசியாக அவரின் சொந்த ஊரான அரியமங்கலத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.  அவரிடம் சிஷ்யராக வந்து சேருவோருக்கு அகோரி  பயிற்சி அளித்து வருகிறார்.  பாபா மணிகண்டனை குருவாக ஏற்றுக் கொண்டு வரும் சிஷ்யர்களும் அதிகம் இருக்கிறார்கள். 

b

பாபா மணிகண்டன்  சிஷ்யர் ஒருவர் சமீபத்தில் விபத்தில் உயிரிழந்த போது சிஷ்யரின் உடலின் மேல் அமர்ந்து விசித்திர பூஜை செய்தார் பாபா மணிகண்டன். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

நள்ளிரவில் சிறப்பு பூஜை,  சங்குகள் முழக்கம் பாபா மணிகண்டன் செய்கைகளால் அப்பகுதியில் பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது.  அவ்வப்போது சுடுகாட்டிற்கும் சென்று சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார்.  மணிகண்டன் இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய பூஜை செய்வதாகவும் தெரிவித்து வருகிறார்.   நள்ளிரவில் அரை நிர்வாணத்துடன் உடல் முழுவதும் விபூதி பூசி பூஜை நடத்தி வருகிறார்கள் .  சங்குகள் முழங்க மிகுந்த சத்தத்துடன் நடந்து  அந்த பூஜைகளால் அப்பகுதியினர் பதற்றத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் போலீசுக்கு புகார்களும் சென்றிருக்கின்றன.

bb

இந்தநிலையில் கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாபா மணிகண்டனிடம் சிஷ்யராக வந்து சேர்ந்துள்ளார்.  அவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கோவிலில் மாலை மாற்றிக் கொண்டு தாலி கட்டிக்கொண்ட அகோரி பாபா மணிகண்டனின்  திருமணம் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.   திருமணத்தின்போது பாபா மணிகண்டன் அரை நிர்வாணத்துடன் தாலி கட்டியுள்ளார்.