என் தாயார் மல்லிகா மாறன் கரம் பிடித்து அழைத்து சென்ற ராகுல் - நெகிழும் தயாநிதி
தன் தாயார் மல்லிகா மாறனின் கரம்பிடித்து அன்போடு அழைத்து சென்ற ராகுல் காந்தி குறித்து நெகிழ்வுடன் மனம் திறந்திருக்கிறார் தயாநிதிமாறன்.
முதல்வர் மு. க. ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான ’உங்களில் ஒருவன்’ புத்தகம் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு ராகுல்காந்தி எம்.பி. வந்திருந்தார். விழா முடிந்து அவர் புறப்படும்போது மறைந்த முன்னாள் அமைச்சர் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறன் ராகுல் காந்தி செல்வதற்காக வழிவிட்டு நின்றுகொண்டிருந்தார்.

இதை கவனித்த ராகுல்காந்தி, ’’நீங்களும் உடன் வாருங்கள்’’ என்று அவரின் கரம் பிடித்து அன்புடன் அழைத்துச் செல்கிறார். அழைத்துச் சென்று பின்னர் விடை பெறுவதற்கு முன்பாக ராகுல்காந்திக்கு, மல்லிகா மாறன் நன்றி தெரிவித்து நெகிழ்ந்தார்.
இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் தயாநிதிமாறன், ’’எனது தாயார் மல்லிகா மாறன் ராகுல் காந்தி அவர்கள் புறப்பட்டு செல்வதற்காக வழிவிட்டு நின்ற போது, நீங்களும் உடன் வாருங்கள் என கரம்பிடித்து அன்போடு அழைத்து வந்த நெகிழ்வான தருணம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து தயாநிதி மாறன் மேலும், எங்களது தமிழ் மக்களின் மீதும் எங்களது தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மீதும் நீங்கள் எப்போதும் காட்டி வருகின்ற பேரன்புக்கு மிகுந்த நன்றி ராகுல். உங்களுக்கு பாதை விடும் பொருட்டு தான் நிற்கும் இடத்திலிருந்து சற்று விலகிக் கொண்டார் எங்களின் தாயார் மல்லிகா மாறன். நீங்கள் அதற்கு மாறாக நீங்கள் உங்களோடு ஒன்றாக நடந்து வர அழைத்த போது, நீங்கள் எங்கள் மீது கொண்டுள்ள கண்ணியமிக்க பேரன்பினை உணர்ந்தோம் என்று பதிவிட்டிருக்கிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு@mkstalin அவர்களின் "உங்களில் ஒருவன்" நூல் வெளியீட்டு விழா நிறைவுக்குப் பின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு@RahulGandhi அவர்கள் புறப்படுகையில், எனது தாயார் திருமதி.மல்லிகா மாறன் அவர்கள் அவர் செல்வதற்கு...
— Dayanidhi Maran தயாநிதி மாறன் (@Dayanidhi_Maran) February 28, 2022
1/2 pic.twitter.com/i7JWqGXYLy


