காமவெறி கண்கள்! அஜித்,வைரமுத்துவை கடுமையாக சாடும் ப்ளூசட்டை மாறன்
திரைப்பட விமர்சகர்களில் சர்ச்சைக்குரியவராகவே எப்போதும் இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். கடந்த 24 ஆம் தேதி அன்று வெளிவந்த அஜித் நடித்த வலிமை படத்திற்கு இவர் கொடுத்த விமர்சனம் அஜித் ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அஜித் ரசிகர்களை மட்டுமல்லாது யூடியூப் சேனல்கள், திரை விமர்சர்கள் பலரும் ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். விமர்சனம் என்கிற பெயரில் கக்குகிறார் என்று திட்டி தீர்த்து வருகிறர்கள். இதற்கு எதிர்வினை ஆற்றி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

அஜித்திற்கு மூஞ்சில் தொப்பை உள்ள இருக்கிறது. படத்தை தயாரித்த போனிகபூர் தான் ஒரு சேட்டு என்றால் அஜித் பஜன்லால் சேட்டு மாதிரி இருக்கிறார். அஜித் டான்ஸ் ஆடுவது பரோட்டாவிற்கு மாவு பிசைவது போன்று இருக்கிறது. மற்றவர்களை ஆடுகிறார்கள் இவர் ஆடுவது கொடுமையாக இருக்கிறது. பரோட்டாவிற்கு மாவு பிசையும் இந்த டான்ஸை தியேட்டரில் சிரிக்காமல் பார்த்தவர்கள் யார்? என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதையடுத்து மாறனை திட்டித்தீர்க்கும் அஜித் ரசிகர்களுக்கும், விமர்சனம் என்கிற பெயரில் உருவ கேலி செய்யலாமா? என்று கேட்போருகும் பதில் கொடுத்திருக்கிறார் மாறன்.

‘’ ஒருவர் எப்படி விமர்சனம் செய்ய வேண்டும் என கடந்த 4 நாட்களாக பல யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வரும் பத்திரிகையாளர்களே, கோடம்பாக்க கோமான்களே, துக்கடா செலப்ரிட்டிகளே.. திரைப்படத்தின் கொண்டாட்டம் என்பது பொது மக்களுக்கு எவ்வித தொந்தரவும் தராமல் இருக்க வேண்டும். உடைமைகளை சேதப்படுத்த கூடாது. ஆனால் அதிகாலை 2 மணி முதல் முக்கியமான சாலைகளில் குவிந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்து வெறித்தனமாக கூச்சலிடும் உரிமையை யார் தந்தது? குழந்தைகளுக்கு பெருமளவில் பயன்படும் பால் பாக்கெட்டுகளை அப்பாவி வியாபாரியின் வண்டியிலிருந்து திருடிச் செல்வது என்னவகையான நாகரிகம்? கூச்சலிட்டும், திருடியும் சட்டம்-ஒழுங்கை மீறும் இவர்களை வன்மையாக கண்டித்து உங்களில் எத்தனை பேர் பேட்டி அளித்து உள்ளீர்கள்? முதலில் இதற்கு வாயைத் திறக்கவும் பிறகு விமர்சன பாடம் எடுக்கலாம். இல்லாவிட்டால் இப்படியான அநாகரீக அரசியல் ரசிக மனோபாவத்தை வளர்ப்பதில் உங்களுக்கும் கணிசமான பங்கு உண்டு என்றே பொருள்’’ என்று சொல்லியிருக்கும் ப்ளூ சட்டை மாறன்,

பச்சிளம் குழந்தைகளின் உணவான பால் பாக்கெட்டை அப்பாவி வியாபாரியிடம் இருந்து திருடும் ரசிகர்கள் அதிகாலை காட்சிகளை தடை செய்து இதுபோன்ற கூட்டத்தை கடுமையாக அரசாங்கம் தண்டிக்க வேண்டும் என்று முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உருவ கேலி செய்ததால் ரசிகர்கள் கொந்தளித்து வருவதால் அவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். ’’ரெட் படத்தில் வரும் இந்த பாடலில் ஸ்லிம்மாக இருக்கும் கதாநாயகியைப் பார்த்து அஜித் பாடுவது என்ன ரகம்? மெல்லிய தேகக்காரி, ஸ்லிம்மான உடம்புக்காரி என்று வர்ணிக்காமல் ஒல்லிக்குச்சி குண்டு என்று பிறரின் உருவத்தை கேலி செய்யும் வரிகள் கொண்ட பாடலை பாடிய போது நீங்கள் எங்கே சென்றீர்கள்? இதே பாடலில் நான் சமஞ்சதும் சாமி வந்து உன் காதில் சொல்லிச்சு தானே எனும் வரிகள் உண்டு. நாம் வணங்கும் சாமிக்கு இதுதான் வேலையா?

பழுத்தாச்சு நெஞ்சம் பலம் பழுத்தாச்சு அணியில் கிட்ட குடுத்தாச்சு. அணில் இப்ப துள்ளலாம் அப்பப்ப பல்லும் பதிக்கலாம் என்று பெண்களின் மார்பகத்தை காமவெறியுடன் பார்ப்பவன் கண்ணுக்கு மட்டுமே இப்படி எழுத தோன்றும் அதில் நடிக்க தோன்றும். இது வெறும் கற்பனை பாடல் அல்ல ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு. ஆகவே உருவ வழிபாடு பாடமெடுக்கும் வெண்ணெய்கள் திராணி இருந்தால் இப்படி பச்சையாக பாடல், வசனம் எழுதுவோர் மற்றும் அதில் நடிப்பதையும் கண்டியுங்கள் இல்லா விட்டால் மூடிக் கொண்டே இருங்கள்’’ என்கிறார்.

வலிமை அதிகாலை காட்சி நேரத்தில் அப்பாவி வியாபாரியின் வண்டியில் இருந்து பால் பாக்கெட்களை திருடும் ரசிகர்கள். குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகளுக்கு பயன்படும் பாலை திருடி கட் அவுட்டிற்கு அபிஷேகம் செய்யும் விசிலடிச்சான் குஞ்சுகள் என்றும் பதிவிட்டிருக்கிறார்.


