நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - பாக்யராஜ் விளக்கம் ( வீடியோ)

 
ba

இயக்குநர் கே. பாக்கியராஜ் தான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதற்கு மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறேன் என்று வீடியோவில் விளக்கம் அளித்திருக்கிறார்.  

 பிரதமர் மோடியின் செயல்பாடுகளைப் பார்த்து அம்பேத்கர் பெருமைப்படுவார் என்று  எழுதியதால் இளையராஜாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர் ஒரு தரப்பினர்.   இந்நிலையில் பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று இயக்குநர் பாக்யராஜ் சொன்னதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

kb

 பிரதமரின் மக்கள் நல திட்டங்கள் புதிய இந்தியா- 2022 என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்தது.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த நூலை வெளியிட , திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் நூலைப் பெற்றுக் கொண்டார் .  இவ்விழாவில் பேசிய பாக்கியராஜ்,   பிரதமர் மோடி பல நாடுகளுக்கு சென்று வருவதை விமர்சிக்கிறார்கள்.   ஆனால் இத்தனை நாடுகளுக்கு ஓய்வில்லாமல் எப்படி செல்கிறார்.  இந்தியாவிற்கு இப்படியான ஒரு எனர்ஜியான பிரதமர் தான் தேவை என்று சொன்னவர்,   பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என கடுமையாக பேசியிருந்தார்.

 பாக்யராஜின் இந்த பேச்சுக்கு மாற்றுத்திறனாளிகள் மனதை புண்படுத்தி விட்டதாக அவர்கள் தரப்பில் மாற்றுத்திறனாளிகளின் வலி தெரியுமா என்று பாக்கியராஜ்க்கு என்று கண்டனம் தெரிவித்து வந்தனர்.   தான் பேசியது வேறு ஒரு எண்ணத்தில் என்றாலும் அது வேறு ஒரு கருத்தாக வேறு ஒரு தரப்பினருக்கு வலியை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்த பாக்கியராஜ்,  அவசர அவசரமாக ஒரு வீடியோ விளக்கத்தை அளித்திருக்கிறார்.

 அதில்,  குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று சொன்ன வார்த்தை ரொம்ப தப்பான அர்த்தத்தை உண்டு பண்ணியது என கேள்விப்பட்டேன்.  மாற்றுத்திறனாளிகள் என்பதற்கும் குறைப்பிரசவம் என்பதற்கும் தொடர்பு இல்லை.  நான் தவறாக சொல்லி இருப்பேன் என்று யார் நினைத்தாலும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் தெரிவித்திருக்கிறார்.


 மேலும் ,  இளையராஜாவை தொடர்ந்து பிரதமர் மோடியை பாக்யராஜ் பாராட்டு பேசியதால் அவர் பிஜேபியில் சேரப்போகிறார் என்ற ஒரு என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் . அது குறித்து முக்கிய பாக்கியராஜ்,    நான் பிஜேபி கிடையாது தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மொழியில் வளர்ந்து தமிழ் சினிமாவில் சினிமா எடுத்து வருகிறேன் .  என் மனதில் திராவிடத் தலைவர்களின் சிந்தனைகள்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.  பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜி ஆர் உள்ளிட்ட தலைவர்களின் கருத்துக்கள் தான் எனக்குள் ஊறிப் போயிருக்கிறது.   தமிழ்நாட்டுக்குள் தமிழ் தலைவர்கள் என்ற மனநிலையில் தான் இருக்கிறேன்.  இதுவரைக்கும் நான் எடுத்த படங்களில் அதுதான் எதிரொலித்து இருக்கிறது.  இனியும் நான் எடுக்கும் படங்களில் அதுதான் எதிரொலிக்கும் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.