மேலூர் மாணவி தாயாரின் புகார் கடிதம் வெளியிட்டு போலீசை சாடும் எச்.ராஜா

 
p

மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி  கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் -சபரி தம்பதியினரின் 17 வயது மகள் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.    இவர் கடந்த 14 ஆம் தேதி அன்று திடீரென்று காணாமல் போயிருக்கிறார்.    ஊரெல்லாம் தேடிப் பார்த்துவிட்டு மாணவியின் தாயார் சபரி மறுநாள் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.    

m

மகளின் விபரம் பத்திரிக்கையில் வந்துவிடும் என்பதால் வழக்குப்பதிவு செய்யாமல் ரசீது மட்டும் போட்டு கேட்டிருக்கிறார் சபரி என்றும்,  போலீசாரும் அதன்படியே வழக்குபதிவு செய்யாமல் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.   இதன் பின்னர் காணாமல் போய் பல நாட்கள் ஆனதால் வழக்குப்பதிவு செய்ய சம்மதம் தெரிவித்திருக்கிறார் சபரி.   அதன்பின்னர் கடந்த மாதம் 21ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்ததும் என்றும் கூறப்படுகிறது.

 கடந்த 14ஆம் தேதி மாணவிவியை அழைத்துக் கொண்டு சென்ற நாகூர் அனிபா மதுரையில் உள்ள தனது நண்பர் பெருமாள் கிருஷ்ணன் என்பவரது வீட்டில் தங்கியிருக்கிறார் என்றும், அதன் பின்னர் அங்கிருந்து ஈரோடு மாவட்டத்தில் பள்ளிபாளையத்தில் உள்ள தனது சித்தப்பா இப்ராஹிம் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் என்றும்  கூறப்படுகிறது.


மாணவியை  கடந்த 2ஆம் தேதி அன்று இரவு தாயாரிடம் ஒப்படைத்த நாகூர் அனிபா,   சிறுமியை அவரின் தாயாரிடம் ஒப்படைக்குமாறு சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் .  இதையடுத்து அவரின் தாயார் சபரியிடம் மகளை ஒப்படைத்திருக்கிறார்.  உடல்நலம் மோசகமாக இருக்கவே மகளை  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்திருக்கிறார்.   அந்த ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  ‘’மேலூர் சிறுமியின் தாயார் தன் மைனர் மகள் காணவில்லை என மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் சார்லசிடம் 15/2/22 ல் அச்சிறுமியின் தாயார் புகார் செய்தும் காவல்துறையின் மெத்தனத்தால் இன்று அச்சிறுமி இறந்துள்ளார். இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. செயல்படாத காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்று  காவல்துறைக்கு கடும்  கண்டனம் தெரிவித்திருக்கிறார்.