ஜூலை 14-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

 

ஜூலை 14-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

கொரோனா நோய்த் தொற்று தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்து வரும் சூழலில் தமிழக அமைச்சரை கூட்டம் ஜூலை 14-ம் தேதி செவ்வாய் கிழமை மாலையில் நடக்கவிருக்கிறது.

ஜூலை 14-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

கடந்த நான்கு நாட்களாக சென்னையில் கொரோனாவால் பாதிப்போரின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் குறைந்தே இருக்கிறது. ஆனால், மதுரை, சேலம், திருச்சி, தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கிராமங்களில் நோய்த் தொற்று அதிகமாவது குறித்து பலரும் கவலைத் தெரிவித்துவருகின்றனர். தமிழக அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜு ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். கொரோனாவால் இம்மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் முழு முடக்கத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாளை (ஞாயிறு – ஜூலை 12) தமிழகம் முழுவதும் முழு முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும். இதனால் தமிழகத்தில் பல ஊர்களில் இன்றே இறைச்சிக் கடைகளில் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

ஜூலை 14-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

இந்தச் சூழ்நிலையில் வரும் செவ்வாய் அன்று நடைபெற விருக்கும் தமிழக அமைச்சரவை கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் பொதுப்போக்குவரத்துக்கான வரம்புகள் அகற்றப்படுவது, சென்னையில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது, மற்ற மாவட்டங்களில் குறிப்பாக, நோய்த் தொற்றல் அதிகம் உள்ள இடங்களில் ஊரங்டகைக் கடுமையாக்குவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்பது, மருத்துவமனை வசதிகளை அதிகப்படுத்துதல், ஜூலை மாதத்திற்குப் பிறகும் ஊரடங்கைத் தொடர்வதா, கைவிடுவதா உள்ளிட்ட முக்கியமான முடிவுகளை இக்கூட்டத்தில் விவாதிக்கப்படாலம் என எதிர்பார்க்கப்படுகிறது.