`வேகமாக பரவும் கொரோனா; முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!;- ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

 

`வேகமாக பரவும் கொரோனா; முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!;- ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்தும் வரும் நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது ஒரு சில மாவட்டங்களில் தளர்வு செய்யப்படுமா? என்பது தெரியவரும்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலை தடுக்க ஜூன் 30-ம் தேதி வரை 5-ம் கட்டமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,295 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1079 ஆக அதிகரித்துள்ளது.

`வேகமாக பரவும் கொரோனா; முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!;- ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு முடிவடைகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இதில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வு ஏற்படுத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் ஜூலை 31-ம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்திருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரண்டு தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். டெல்லியில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஜூலை 31-ம் தேதிவரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் கர்நாடகாவில் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்படாது என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.