தமன்னா, விராட் கோலியை கைது செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு !

தமன்னா, விராட் கோலியை கைது செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு !

ஆன்லைனில் பல சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக, ஆன்லைனில் ’ரம்மி’ என்ற சீட்டாட்ட விளையாட்டுக்கு தனி மவுசு. அதை விளையாட அழைக்கும் விதமான விளம்பரங்கள் சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிப்பரப்பாவதைப் பார்க்க முடியும். இதனால், இளைஞர்களின் நேரமும் பணமும் விரயமாவதாகப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமன்னா, விராட் கோலியை கைது செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு !

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் ரம்மி, பாஸியன், லியோவேகாஸ், ஸ்பார்டன்போக்கர், போக்கர் டங்கல், பாக்கெட் 52, ஜீனியஸ் கேசினோ போன்ற ‘ஆன்லைன்’ விளையாட்டுகள் களான்கள் போல முளைத்துக் கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும் வீட்டில் இருந்தபடியே எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம் என இளைஞர்களைத் தூண்டுகின்றன. இதனால் நிதி நெருக்கடி மற்றும் உயிர் பலிகள் கூட ஏற்படுகின்றன.

தமன்னா, விராட் கோலியை கைது செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு !

இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்ததற்காக தமன்னா, விராட் கோலியை கைது செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூர்யபிரகாஷ் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 4 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.