இலங்கை தேர்தல் – ராஜபக்‌ஷே கட்சி மாபெரும் வெற்றி. மற்ற கட்சிகளின் முழு விவரம்!

 

இலங்கை தேர்தல் – ராஜபக்‌ஷே கட்சி மாபெரும் வெற்றி. மற்ற கட்சிகளின் முழு விவரம்!

இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்‌ஷே கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

நமது அண்டை நாடான இலங்கையில் ஆகஸ்ட் 5 –ம் தேதி தேர்தல் நடந்தது. ஓரிரு மாதங்கள் முன்பே நடைபெற வேண்டிய தேர்தல் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது நேற்று முன்தினம் நடந்தது.

இலங்கை தேர்தல் – ராஜபக்‌ஷே கட்சி மாபெரும் வெற்றி. மற்ற கட்சிகளின் முழு விவரம்!

இந்தத் தேர்தலில் ராஜபக்‌ஷே தலையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சஜித் பிரேமதாஸ தலைமையேற்று நடத்தும் ஐக்கிய மக்கள் சக்தி, ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி தேசிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் களத்தில் நின்றன. படு தீவிரமாக பிரச்சாரங்கள் நடந்தன. இந்தத் தேர்தலில் தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சிகளுக்கு வாக்கு அளிக்க வேண்டாம் என தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகள் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இலங்கை தேர்தல் – ராஜபக்‌ஷே கட்சி மாபெரும் வெற்றி. மற்ற கட்சிகளின் முழு விவரம்!

நேற்று காலை முதல் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் ராஜபக்‌ஷே தலையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இக்கட்சி 68 லட்சத்துக்குக்கு அதிகமான வாக்குகளைப் பெற்று மூன்றில் இரண்டு மடங்கு வெற்றியை அடைந்துள்ளது. இதன்மூலம் 145 சீட்டுகள் அக்கட்சிக்கு கிடைத்திருக்கின்றன. பெரும்பாண்மையை நிருபிக்க அக்கட்சிக்கு இன்னும் ஐந்தே இடங்கள் போதுமானது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 71 ஆயிரத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைத்திருப்பதால் 54 சீட்டுகளும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் 10 சீட்டுகளும் கிடைத்துள்ளன, ரணில் விக்ரமசிங்க வின் கட்சிக்கு எவருமே கணிக்காதளவுக்கு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்தத் தேர்தலில் அக்கட்சிக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைக்கும் அளாவுக்கே வாக்குகள் பெற்றுள்ளன.

இலங்கை தேர்தல் – ராஜபக்‌ஷே கட்சி மாபெரும் வெற்றி. மற்ற கட்சிகளின் முழு விவரம்!

ஈழமக்கள் ஜனநாயக் கட்சிக்கு 2 சீட்டுகளும், தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் 1 சீட்டும், தமிழ் மக்கள் தேசியக் கட்சிக்கு ஒரு சீட்டும் கிடைத்துள்ளது. ஜாதிக்க ஜன பலவேகே  கட்சிக்கு 2 சீட்டுகளும் கிடைத்துள்ளன.

தமிழர் வாழும் பகுதியில்கூட சிங்கள கட்சிகளுக்கு அதிக வாக்குகள் விழுந்ததிருக்கின்றன என்று தமிழர் ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.