’காட்டிக்கொடுத்தவர்களை ஆதரிக்காதீர்கள்’ இலங்கை தேர்தல் குறித்து தமிழர்களுக்கு சீமான் வேண்டுகோள்

 

’காட்டிக்கொடுத்தவர்களை ஆதரிக்காதீர்கள்’ இலங்கை தேர்தல் குறித்து தமிழர்களுக்கு சீமான் வேண்டுகோள்

இன்னும் சில தினங்களில் நமது அண்டை நாடான இலங்கையில் தேர்தல் நடக்கவிருக்கிறது. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ராஜபக்‌ஷே இலங்கை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார்.  மார்ச் மாதம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது . அதிலிருந்து தேர்தல் நடத்த பல தேதிகள் முடிவு செய்யப்பட்டாலும் கொரோனா நோய்த் தொற்றால் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் இந்தத் தேர்தலில் என்ன முடிவு வேண்டும் என்று ஆலோசனையாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து கூறியுள்ளார்.

’காட்டிக்கொடுத்தவர்களை ஆதரிக்காதீர்கள்’ இலங்கை தேர்தல் குறித்து தமிழர்களுக்கு சீமான் வேண்டுகோள்

அவர், ஆயுதப் போராட்ட வடிவம் நிறுத்தப்பட்ட சூழலில் நமக்கு இருக்கிற கடைசி வாய்ப்பு அரசியல் விடுதலைதான். அந்த அரசியல் விடுதலையை உறுதியாக முன்னெடுப்பவர்கள் யார் என்பதைச் சிந்தித்துப் பார்த்து நீங்கள் ஒரு வாய்ப்பை வழங்குங்கள். கடந்த காலங்களில் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு, பெளத்த பேரினவாதத்திற்குத் துணை போனவர்களையும், இன்றும் துணை நிற்பவர்களையும் புறந்தள்ளுங்கள்.

இறுதிப்போருக்கு பிறகு, ஈழ மண்ணின் உரிமைகள் பறிபோகும்போது கைகட்டி வேடிக்கை பார்த்த துரோகிகளை ஆதரிப்பதைக் கைவிடுங்கள். சிங்கள அரசின் சலுகைகளுக்கு உடன்பட்டு நம் தாய் மண்ணின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து அழித்து முடிக்கத் துணைபோனவர்களை ஒருபோதும் ஆதரிக்காதீர்கள்.

’காட்டிக்கொடுத்தவர்களை ஆதரிக்காதீர்கள்’ இலங்கை தேர்தல் குறித்து தமிழர்களுக்கு சீமான் வேண்டுகோள்

தாய்மண்ணின் உரிமைகளுக்காக, இனப்படுகொலை காலத்தின்போது காணாமற்போன நம் உறவுகளை மீட்டெடுக்க சிங்கள பேரினவாத அரசை எதிர்த்து குரல் கொடுத்தவர்களுக்காக உங்கள் விரல் நீளட்டும். ஒற்றையாட்சியை ஏற்காமல், வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழர் தாயகமாக அறிவிக்க யார் முயல்கிறார்களோ, தன்னாட்சி உரிமைக்காக யார் அயராது, பின்வாங்காது உறுதியாக நிற்கிறார்களோ, நம் தாய் நிலத்தில் சிங்களப் பேரினவாத அரசால் நடந்த இனப்படுகொலை குறித்துத் தலையீடற்ற பன்னாட்டு விசாரணைக்காக யார் இன்றுவரை குரல் கொடுக்கிறார்களோ, தாயக விடுதலைப் பெறுவதற்கான பொதுவாக்கெடுப்பு யார் கோருகிறார்களோ அவர்களுக்குதான் உங்களுடைய வாக்கு செலுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

மீண்டும் மீண்டும் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா போன்ற துரோகிகளையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் வாக்கு செலுத்தி வெல்ல வைப்பதென்பது நாம் துரோகத்திற்குத் துணைபோனதாக ஆகிவிடும். அவர்கள் செய்த துரோகத்தைச் சரியென்று நாமே அங்கீகரிப்பதுபோல் ஆகிவிடும். அதை ஒருபோதும் எம்மின சொந்தங்கள் செய்யமாட்டீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குண்டு.

’காட்டிக்கொடுத்தவர்களை ஆதரிக்காதீர்கள்’ இலங்கை தேர்தல் குறித்து தமிழர்களுக்கு சீமான் வேண்டுகோள்

மேலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நம் தலைவரால் தொடங்கப்பட்டது என்றெண்ணி, அவர்கள் ஒருபோதும் தங்கள் இலட்சியப் பாதையில் இருந்து விலகமாட்டார்கள் என நம்பி, அவர்கள் எது செய்தாலும் ஆதரித்துச் செயல்பட்டதன் விளைவுதான் இவ்வளவு பெரிய பின்னடைவு ஈழ நிலத்திற்கு வந்துள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும்.

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று என் மக்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. ஏனென்றால் இந்த நிலத்தில் நிற்கிற என்னைப்போன்ற தாயக தமிழர்களை விட, ஈழத்தாயகத்தில் வாழும் உறவுகளான நீங்கள் சுமந்து நிற்கும் காயங்களும், வலிகளும் மிக அதிகம். அந்த வலியிலிருந்து உணர்ந்து, சிந்தித்து நீங்கள் இந்தத் தேர்தலை எதிர்கொள்வீர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்’ என்று சீமான் கூறியுள்ளார்.