திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சீமான்

 

திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சீமான்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சீமான்

எம்பி தொல். திருமாவளவன் தலித்துக்கள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தலித்துக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார். தலித் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துதல், தனித்தமிழ் வளர்ச்சிக்கு உதவுதல், சாதிய அடக்குமுறைக்கு எதிராக கருத்திடுதல், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தனித்தமிழீழக் கொள்கைக்கும் ஆதரவளித்தல், இந்துத்துவ கொள்கையினை எதிர்த்தல் போன்றவை அவரது முக்கியக் கொள்கைகளாகும்.


இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து கூறியுள்ளார். அதில், “விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்!அறிவர்! எழுச்சித் தமிழர்!அண்ணன் திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளில் நிறைந்த பேரன்புகொண்டு நெஞ்சார வாழ்த்துவதில் தம்பி பெரிதும் மகிழ்கிறேன்.வாழ்க அண்ணன் பல்லாண்டு!” என்று அவர் தெரிவித்துள்ளார்.