அழைப்பு விடுத்தும் வராத சீமான்…டிவிட்டரில் சொன்ன வாழ்த்து!

 

அழைப்பு விடுத்தும் வராத சீமான்…டிவிட்டரில் சொன்ன வாழ்த்து!

சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஸ்டாலின் இன்று முதலமைச்சராக பதவியேற்றார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முக ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கொரோனா காரணமாக குறிப்பிட்ட சில நபர்களே பதவி ஏற்பு விழாவில் பங்கெடுத்து நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அழைப்பு விடுத்தும் வராத சீமான்…டிவிட்டரில் சொன்ன வாழ்த்து!

மு.க. ஸ்டாலின் தொடர்ந்து 33 அமைச்சர்களும் ஒருவர்பின் ஒருவராக பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.. விழாவில் அதிமுக சார்பில் ஓபிஎஸ், நவநீதகிருஷ்ணன் தனபால் மற்றும் பாஜக சார்பில் இல. கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ” சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கப் போகும் திமுக தலைவர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அமைச்சரவையினரின் பதவியேற்கும் விழா சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், இவ்விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்மொழியின் மீட்சி, தமிழர்களின் நலன், தமிழினத்தின் தன்னுரிமை, வளக்கொள்ளைக்கெதிரான மண்ணுரிமை, சமூக நீதி, மாநிலத்தன்னாட்சி, ஏழ்வர் விடுதலை, மதவாதத்திற்கு எதிரான போர் போன்றவற்றில் சமரசமின்றி நின்று நிலைபெற்று தமிழகத்தின் குரலாய் ஒலிக்க வேண்டுமென விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.