ரஜினிகாந்தின் ஹேஷ்டேக் இந்திய டிரெண்டிங்கில் நம்பர் 1 – #கந்தனுக்கு_அரோகா

ரஜினிகாந்தின் ஹேஷ்டேக் இந்திய டிரெண்டிங்கில் நம்பர் 1 – #கந்தனுக்கு_அரோகா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  பயன்படுத்தியிருந்த வார்த்தை இப்போது இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது.

ரஜினிகாந்தின் ஹேஷ்டேக் இந்திய டிரெண்டிங்கில் நம்பர் 1 – #கந்தனுக்கு_அரோகா

கருப்பர் கூட்டம்’ எனும் யூடியூப் சேனல் கந்தசஷ்டி கவசம் பாடல்களைப் பற்றி ஒரு வீடியோ தயாரித்து, வெளியிட்டிருந்தார்கள். அதில் உள்ள பல பகுதிகள் முருகப் பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதாக பாரதிய ஜனதா கட்சி காவல் துறையில் புகார் அளித்தது. கருப்பர் கூட்டம் சேனலைச் சேர்ந்தவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டன. அந்த சேனலின் அலுவலகம் காவல் துறையால் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக கோவை சுந்தராபுதூரில் உள்ள பெரியார் சிலைக்கு அருண் என்பவர் காவிச்சாயம் பூசினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். நேற்று ஒருவ ஈரோட்டில் பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூச முயன்று கைது செய்யப்பட்டார்.

ரஜினிகாந்தின் ஹேஷ்டேக் இந்திய டிரெண்டிங்கில் நம்பர் 1 – #கந்தனுக்கு_அரோகா

கருப்பர் கூட்டம் சேனலில் அனைத்து வீடியோக்களும் அழிக்கப்பட்டன. இதற்கு சமூக ஊடகத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த பதிவுகள் இடப்பட்டன. இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை ட்விட்டரில் இந்தப் பிரச்னை தொடர்பாக தம் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளைக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும்.

ரஜினிகாந்தின் ஹேஷ்டேக் இந்திய டிரெண்டிங்கில் நம்பர் 1 – #கந்தனுக்கு_அரோகா

எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா என்று பதிவு செய்துவிட்டு #கந்தனுக்கு_அரோகா என்ற ஹேஷ் டேக்கையும் இட்டிருந்தார். அது இப்போது இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.

ரஜினிகாந்தின் ஹேஷ்டேக் இந்திய டிரெண்டிங்கில் நம்பர் 1 – #கந்தனுக்கு_அரோகா

ரஜினிகாந்தின் ட்விட் நான்கு மணிநேரத்தில் 14.4 ஆயிரம் ரீவிட் செய்யப்பட்டிருக்கின்றன. 32.3 ஆயிரம் லைக்ஸ் பெற்றிருக்கிறது.