நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் மாயம்!

 

நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் மாயம்!

நெல்லை

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் குளித்த பாலிடெக்னிக் மாணவர் நீரில் மூழ்கி மாயமாகினார்.

தென்காசி மாவட்டம் திருமலையப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது மகன் சரவணன் (22). இவர் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இ.சி.இ படித்து வந்தார். இந்த நிலையில், சங்கரலிங்கம், சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் மாயம்!

தொடர்ந்து, இன்று காலை சங்கரலிங்கம், தனது மகன் சரவணனுடன் கல்லிடைக்குறிச்சியில் உள்ள குமாரகோவில் தாமிரபரணி ஆற்று படித்துறை பகுதிக்கு குளிக்க சென்றார். ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற சரவணன், தண்ணீரில் தத்தளித்தார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் மீட்க முயன்றபோது, அவர் நீரில் மூழ்கினார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி, மாயமான சரவணனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உறவினர் வீட்டிற்கு வந்த மாணவர், ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.