யார் இந்த விஜயநல்லதம்பி? ஒரு மாதம் தலைமறைவாக இருந்தது ஏன்?

 
vi

 முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க  8 தனிப்படைகள் அமைத்து 20 நாட்களாக போலீசார் தேடி வந்ததும்,  20 நாட்களாக ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக இருந்ததும்,   அதன்பின்னர் கர்நாடகத்தில் 20 நிமிடங்கள் காரை துரத்தி சென்று நடுரோட்டில் மடக்கிப்பிடித்து கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு  நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.  

க்

 ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்வதற்கு காரணமாக அமைந்தவர் விஜய நல்லதம்பி.  அவர் கொடுத்த புகாரில்தான் உள்ளேதான் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார்.  விஜயநல்லதம்பி புகாரில்  ராஜேந்திரபாலாஜி 20 நாட்கள் தலைமறைவாக இருந்தார். ஆனால்,  புகார் கொடுத்த விஜயநல்லதம்பி ஒரு மாதம் தலைமறைவாக இருந்துள்ளார்.

 முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி தான் விஜய நல்லதம்பி.   இவரிடம் அதிமுகவைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தனது உறவினருக்கு ஆவினில் வேலை வாங்கித் தர வேண்டும் என்று சொல்லி 30 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார்.   ஆனால் வேலை வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் விஜயநல்லதபி ஏமாற்றி வந்ததால்,  அவர்  மீது ரவீந்திரன் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

 இது குறித்து விஜய் நல்ல தம்பியிடம் போலீஸ் விசாரணை நடத்தியபோது ரவீந்திரன் மாதிரி பலரிடம் ஆவினில் வேலை வாங்கி தருகிறேன் என்று சொன்னதால் மூன்று கோடி ரூபாய் வசூலித்து ராஜேந்திரபாலாஜியிடம் கொடுத்தேன்.   அவர் வேலையும் தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் மோசடி செய்துவிட்டதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

ர

 இந்த புகாரில் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டு சிறை சென்று தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார்.   இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய் நல்ல தம்பியிடம் விசாரணை நடத்த போலீசார் தேடிவந்தனர்.   இதை அறிந்த விஜய் நல்லதம்பி தலைமறைவாக இருந்தார்.   ஒரு கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த விஜய் நல்ல தம்பியை கோவில்பட்டியில் இன்று காலை ஐந்து முப்பது மணி அளவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

 ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி புகார் கொடுத்து சிறைக்கு அனுப்பிவிட்டு ஒரு மாத காலம் ஏன் தலைமறைவாக இருந்தார் என்று போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.