எந்த அண்ணாமலை? டிடிவி தினகரன் - திருமுருகன் காந்தி

 
thi

மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் மாணவி லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில்,  அதுதொடர்பாக போராட்டங்களும் நடத்தி வரும் நிலையில்,  தற்போது மாணவியின் வாக்குமூலமாக புதிய வீடியோ ஒன்று வெளியாகி இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

mi

 இதை அடுத்து அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்  என்று எதிர்தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மாணவி மரணத்தில் பொய்தகவல்களை பரப்பி, தமிழர்களிடத்தில் பிரிவினையையும், குழப்பத்தையும் உருவாக்கி கலவரம் செய்யமுயன்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அரசு உடனே சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும். பாஜக கும்பலின் கீழ்த்தரமான, வன்முறை வெறியூட்டும் அரசியலுக்கு நாம் முடிவு கட்டவேண்டும் என்கிறார் மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.

aa

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் மண்டல நிர்வாகிகளுடன் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம்,    மாணவி லாவண்யா விவகாரத்தில் தவறான தகவலை வெளியிட்ட அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டேக்  ட்விட்டரில் டிரெண்டாகி வருவது குறித்து கேள்வி கேட்க,   ‘’ எந்த அண்ணாமலை?’’ என்று கேட்ட தினகரன்,    எந்த அண்ணாமலை என்பதை உறுதி செய்த பின்னர்,     தவறு என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.