கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது... ‘ஜெ.’ போட்ட உத்தரவு

 
kj

திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது என்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார்.

 முதுகுளத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர். பி. உதயகுமார்,    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழி ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவர் மணிகண்டனை கடந்த சனிக்கிழமையன்று முதுகுளத்தூர் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.   தொடர்ந்து இரவு 7 மணிக்கு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும்,   வீட்டிற்கு வந்த அவர் ரத்த வாந்தி எடுத்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் என்று சொல்லும் உதயகுமார்,    

kj1

  திமுக ஆட்சியில் இது புதிதல்ல கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது  சென்னையில் சட்டக் கல்லூரி வாசலில் மாணவர்களிடையே  கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்.  அப்போது  அருகில் நின்று கொண்டிருந்த காவல்துறை அந்த வன்முறையை தடுக்காமல் யாருடைய உத்தரவுக்காக கைகட்டி வாய்மூடி நின்று வேடிக்கை பார்த்தது?   இதில் மாணவர் பாரதி கண்ணன் கடுமையாக தாக்கப்பட்டார் என்கிறார்.

  அவர் மேலும் அந்த சம்பவம் குறித்து,  புரட்சித்தலைவி அம்மா இந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்து நீதியை நிலைநாட்டிட தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.  அதைத்தொடர்ந்து மாணவரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உத்தரவிட்டார்.  அப்போது நான் மாநில மாணவரணி செயலாளராக இருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினேன் என்று தெரிவித்திருக்கிறார்.

udh

தற்போது,   ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும் குடும்பத்திற்கு அரசு வேலை தர வேண்டும்  என்று வலியுறுத்தி இருக்கும் உதயகுமார்,   மணிகண்டன்  மரணத்தில் காவல்துறையை சேர்ந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டிருக்கிறார்.

மணிகண்டன் மரணத்தில் பெற்ற தாய் நீதி கேட்டு போராடி வருகிறார் .  வேதனையை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது தந்தையின் நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்.  ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உரிய நீதியை வழங்க வேண்டும் என்று மாநில அம்மா பேரவை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று சொல்லும் உதயகுமார்,   இந்த ஆட்சியில் பெண்களுக்கும்,  பொது மக்களுக்கும்,  மாணவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது.  மனித நேயத்துடன் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.