உதயநிதியிடம் என்ன கோளாறு உள்ளது? அவரைவிட கோளாறான அமைச்சர் யார்? சிக்கலில் அமைச்சர் கே.என்.நேரு
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று அவரது நண்பரும், பள்ளிகல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் கோரிக்கை வைத்திருக்கிறார். இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேருவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘’கேட்கிறது அவரோட உரிமை. யாரை அமைச்சராக்குவது என்று முதல்வர் விரும்புகிறாரோ அவரை அமைச்சராக வைத்துக்கொள்ளலாம்.’’ என்று பதிலளித்திருக்கிறார்.
நீங்க என்ன நினைக்கிறீங்க? என்ற கேள்விக்கு, ’’தலைவர் எது செய்தாலும் சரி’’ என்று சொல்லி இருக்கிறார்.
அவர் அமைச்சராவதற்கு தகுதியானவரா என்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, ’’ஏங்க, அதைவிட கோளாறான ஆளெல்லாம் அமைச்சராக இருக்கிறார்கள். நீங்க வேற.. ’’என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார்.
இதற்கு, உதயநிதியின் செயல்பாடு குறித்து, உள்ளதை உள்ளபடி உண்மையை சொல்லி இருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. என்று சொல்லும் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, அமைச்சர் அவர்களே, உதயநிதியிடம் என்ன கோளாரு உள்ளது என்பதையும், அவரைவிட கோளாறான அமைச்சர் யார் என்பதையும் உள்ளதை உள்ளபடி கூறுங்கள். உண்மையை உலகுக்கு சொல்லுங்கள் என்று கேட்கிறார்.
கோளாறான அமைச்சர்கள்..சபாஷ் நேருஜி என்கிறார் தமிழக பாஜவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர். அவர் மேலும், என்னமோ வர வர நேருவுக்கு ரொம்ப தில்தான். உண்மை பேசுகிறார் என்கிறார்.
கே.என்.நேருவின் அந்த வீடியோ பேட்டியை வைத்து, ‘’மைண்ட் வாய்ஸ்-னு நினைச்சி சத்தமா பேசிட்டீங்களே அமைச்சரே!’’என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
கோளாறான அமைச்சர்கள்
— S.R.SEKHAR 🇮🇳 (@SRSekharBJP) December 16, 2021
சபாஷ் நேருஜி
என்னமோ
வர வர
நேருவுக்கு
ரொம்ப தில்தான்
உண்மை பேசுகிறார் https://t.co/H4BxgcZ9NH