ஸ்டாலின் நேரடியாக கேட்டுவிட்டால் என்ன செய்வது? மன உளைச்சலில் வைகோ

 
vச்

திமுக எம்எல்ஏவை  மிரட்டிய விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அது குறித்து தன்னிடம் கேட்டால் என்ன சொல்வது? தர்ம சங்கடத்திற்கு ஆளாக வேண்டி இருக்குமே என்ற மன உளைச்சலில் இருக்கிறாராம் வைகோ.

 தென்காசி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டிதான் வைகோவின் சொந்த ஊர்.   இவ்வூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டுமென்று திமுக எம்எல்ஏ ராஜனிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் வைகோ.  ஆனால் அவர் அதற்கு முன்பாகவே  சாயமலை அல்லது குருவிகுளம் கிராமத்தில் தரம் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையை அமைக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியத்திடம் அனுமதி பெற்று விட்டதாக சொல்ல,  கொந்தளித்து இருக்கிறார் வைகோ.

வ்

 தென்காசி மாவட்ட மதிமுக செயலாளரின் போன் மூலம் எம்எல்ஏ ராஜாவை தொடர்பு கொண்ட வைகோ,   நீ எனக்கே அரசியல் கத்துக் குடுக்கிறியா?  உன்னை ஜெயிக்க வச்சதுக்கு காட்டுற நன்றி விசுவாசம் இதுதானா? முதலமைச்சர் கிட்ட சொல்லி உனக்கு இனி அரசியல் எதிர்காலமே இல்லாமல் செய்து விடுவேன் என்று கடுமையாக பேசியதாக ராஜா தரப்பில் சொல்லப்படுகிறது.  கட்சி மேலிடத்துக்கு ராஜா இதுகுறித்து முறையிட்டு இருக்கிறார்.   வைகோ அந்த ஆடியோவையும் அறிவாலயத்திற்கு அனுப்பி இருக்கிறார்.

மழை வெள்ளம் குறித்த நடவடிக்கைகளில் முதல்வர் மும்முரமாக இருந்ததால் இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.  தற்போது திமுக மேலிடம் இந்த பிரச்சினையை கையில் எடுப்பதாக தெரிகிறது .

திமுக எம்எல்ஏவை வைகோ மிரட்டியதாக செய்திகள் வெளியானது.  அது குறித்து கட்சி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,  திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி,   இது விஷயமாக ஸ்டாலின் சம்பந்தப்பட்ட திமுக மாவட்டச் செயலாளரிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்.  முதலமைச்சரின் கவனம் தற்போது மழை வெள்ள பிரச்சனையில் இருக்கிறது.  அதற்கு பிறகு இப்பிரச்சனையில் தீர விசாரித்து முடிவு எட்டப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

 ஆர். எஸ். பாரதி இந்த பதில் வைகோவுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு தன்னிடம் ஏதாவது கேட்டுவிட்டால் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுமே என்று வைகோ மன உளைச்சலில் இருக்கிறார் என்கிறது மதிமுக வட்டாரம்.