ராஜேந்திரபாலாஜி என்ன கொலை செய்து விட்டாரா? ஆளுநரிடம் முறையிட்ட மாஜிக்கள்

 
மஜி

 பண மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறார்.  அதுவரைக்கும் தான் கைது செய்யப் படாமல் இருப்பதற்காக 14 நாட்கள் அவர் தலைமறைவாக இருக்கிறார்.  அவரை போலீஸ் வலை விரித்து தேடி வருகிறது. 

 இந்த நிலையில்,  முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் ,  சி.வி சண்முகம் தலைமையில் அதிமுகவின் சட்ட குழு உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம், மனோஜ் பாண்டியன், இன்பதுரை,  பாபு முருகவேல்  ஆகியோர் ஆர்.என்.ரவியை  இன்று மாலை சந்தித்தனர்.  மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு சென்றவர்கள் 30 நிமிடங்கள் கழித்து வெளியே வந்தார்கள்.

ர

 ஆளுநர் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்,   இந்த அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள்,  அரசியல் செய்பவர்களை காவல்துறையை வைத்து பொய் வழக்குகளை போடுகின்றார்கள்.   இரவு நேரங்களில் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.  எதிர்க்கட்சிகள் மீது வழக்குப் போடுவார்கள். அதற்காக அஞ்சப்போவதில்லை நாங்கள்.    எங்கள் மீது போடப்படும் வழக்குகள் நீதிமன்றத்தில் சந்திப்போம்  என்றார்கள்.

மேலும்,  தமிழகத்தில் இன்றைக்கு அவசர நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  இந்த நிலை இன்று ராஜேந்திரபாலாஜிக்கு வந்திருக்கிறது.   நாளை எங்களுக்கு வரலாம் .ராஜேந்திரபாலாஜி என்ன கொலை செய்து விட்டாரா? உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் மறுத்துவிட்டது அடுத்து உச்சநீதிமன்றத்திற்கு போயிருக்கிறார்.  அவரை கைது செய்ய ஏன் இவ்வளவு அவசரம் காண்பிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினர்.

 ராஜேந்திர பாலாஜி மீது என்ன வழக்கு போடப்பட்டு இருக்கிறதோ அதே வழக்கு செந்தில்பாலாஜி மீதும் உள்ளது . நாங்கள் பழி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் செந்தில்பாலாஜியை கைது செய்திருக்கலாம் என்று ஆவேசமாக சொன்னார்கள்.