சசிகலா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? மாம்பலம் போலீசிடம் விளக்கம் கேட்கும் நீதிமன்றம்

 
ss

அதிமுகவின் பொதுச் செயலாளர் என சசிகலா தொடர்ந்து பேசி வருவதோடு அறிக்கையும் வெளியிட்டு வருகிறார்.  இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.  

 இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சசிகலா மீது ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க மாம்பழம் போலீசாருக்கு அறிவுறுத்துமாறு அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .

sss

அந்த வழக்கின் மனுவில்,   பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும்,   இதன் ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டிருக்கிறது . ஆனால் கட்சிக்கு உரிமை கோரிய சசிகலாவின் மனுவை தேர்தல் ஆணையமும்,  டெல்லி உயர்நீதிமன்றமும்,  உச்ச நீதிமன்றமும் நிராகரித்திருக்கிறது என்று சுட்டிக்காட்டி இருந்தார்.

 இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது,  சைதாப்பேட்டை 17வது நீதித்துறை நடுவர் , அதிமுக சார்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது என்பது வரும் 20ஆம் தேதி அன்று எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் உத்தரவிட்டார்.  மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து இருக்கிறார்.