காத்திருந்தது 70 ஆயிரம் நாற்காலிகள் - வந்தது 700 பேர்தானா?

 
ch

 பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.  இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று பஞ்சாப்பில் நடைபெற இருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க சென்றார். 

இதற்காக  பதிந்தா விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடி,  அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பயணிப்பதாக இருந்தார். ஆனால்,  மோசமான வானிலை காரணமாக 20 நிமிடங்கள் விமான நிலையத்தில் பிரதமர் காத்திருந்தார்.  அப்படியும் வானிலை சீர் அடையாததால் 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை மார்க்கமாக கடப்பது என்று முடிவு செய்தார். 

p

இந்த நிலையில்,  மத்திய அரசு கொண்டு வந்து பின்னர் பெரும் போராட்டங்களுக்குப் பின்னர்  புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது.  இந்த வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து,  அந்த போராட்டங்களில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நியாயம் கேட்டு  பிரதமரின் கான்வாயை விவசாயிகள் மறித்தனர். இதனால் 20 நிமிடங்கள் மேம்பாலத்தில் காத்திருந்தார் பிரதமர் மோடி .

நிலைமை சீரடையாததால் மீண்டும் விமான நிலையம் திரும்பினார்  பிரதமர்.  இதனால் அவர் பங்கேற்க இருந்த பெரோஸ்பூர் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது . விமான நிலையத்தில் இருந்த மாநில அரசு உயர் அதிகாரிகளிடம் பேசிய பிரதமர் மோடி,  உயிருடன் திரும்பி செல்ல உதவியதற்காக உங்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கோபமாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் பிரதமர் மோடி .

pm

இந்த சம்பவம் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.  இது குறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான விளக்கம் கேட்கப்படும் என்றும்,  மாற்று பயணத்திற்கு பிரதமர் சாலை வழியாகச் செல்ல நேரும்போது பஞ்சாப் அரசு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சக அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.

 இந்த நிலையில்,   பஞ்சாப் முதல்வர் சரண்சிங் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.   அவர் எங்கள் மீது தவறு இல்லை பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை. பிரதமர் மோடி விமானம் மூலம் வர திட்டமிட்டு இருந்தார்.  ஆனால் எங்களுக்கு  தெரிவிக்காமல் சாலை மார்க்கமாக வந்தார்.  பிற்பகல் 3 மணிக்கு சாலையிலிருந்து செல்லுமாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களுடன் கோரிக்கை விடுத்து இருந்தேன்.   இதற்கிடையில் பிரதமரின் நிகழ்ச்சிக்கு எழுபதாயிரம் பேருக்கு நாற்காலிகளை பாஜகவினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.  ஆனால் 700 பேர்தான் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.  இதன் காரணமாகத்தான் அவர்கள் போராட்டக்காரர்களை சாக்கு போக்கு சொல்லி மற்ற காரணங்களை காரணம் சொல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்து இருக்கிறார்கள் என்று சொல்லி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.