வினோஜ் பி. செல்வத்திற்கு துணைநிற்கும் அண்ணாமலை

 
vi

ஊடகங்களில் வந்த செய்திகளை குறிப்பிட்டு கோவில்கள் இடிப்பு என்று பதிவிட்ட  வினோஜ் பி.செல்வம் மீது வழக்கு என்றால், அந்த செய்தி பொய் என்றால், செய்தியை வெளியிட்டவர்கள் மீது வழக்கு தொடுக்குமா தமிழக அரசு? அல்லது கோவில்களை இடித்தவர்கள் மீது நடவடிக்கை பாயுமா?  உண்மையா? பொய்யா? என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

nn

சென்னை  கீழ்ப்பாக்கத்தினைச் சேர்ந்த இளங்கோவன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக பாஜகவின் இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி. செல்வம் மீது புகார் அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், வினோஜ் பி.செல்வம் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மக்களிடையே வெறுப்பையும் பகைமையையும் உருவாக்கி பொது அமைதியை கெடுக்கும்  வகையில் கருத்துக்களை பதிவிட்டதாகவும்,   திமுகவின் 200 நாட்கள் ஆட்சியில் 134 கோயில்கள் இடிப்பு என்றும் தமிழக அரசுக்கு அவதூறு ஏற்படுகின்ற வகையிலும் செய்தி பரப்பி விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

 இளங்கோவனின் இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார்,  வினோத் பி. செல்வம் மீது  மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் .  

 வினோஜ் பி. செல்வம் மீது 3 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், நாராயணன் திருப்பதி இந்த கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ,  வினோஜ் பி. செல்வத்திற்கு பாஜக துணை நிற்கும் என்று தெரிவித்திருக்கிறார்.