ஓகே சொன்ன விஜய்! உற்சாகமாக களமிறங்கும் ரசிகர்கள்!

 
vஇ

ஊரக உள்ளாட்சி தேர்தலைப்போலவே  நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்குகிறார்கள் என்பதால்  ஊராக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியை இந்த தேர்தலிலும் பெறுவார்கள் என்று விஜய் மக்கள்  இயக்கத்தினர் மீது பார்வை குவிந்திருக்கிறது.

வ்வ்வ்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய்யின் அனுமதியைப் பெற்று விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்கினர்.   ஒன்பது மாவட்டங்களில் நடந்த  ஊரக உள்ளாட்சி தேர்தல் 169 பேர் போட்டியிட்டனர்.  இதில் 129 பேர் வெற்றி பெற்றனர். 13 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர். 

அதிமுக -திமுகவுக்கு அடுத்தபடியாக பெரிய கட்சியாக உருவாகி விடுமோ என்கிற சலசலப்பை ஏற்படுத்தி இருந்தன ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பெற்ற வெற்றி . 

வ்

 இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.   இந்த தேர்தலில் மற்ற கட்சிகளை போல் விஜய் மக்கள் இயக்கத்தினர் களம் இறங்க அனுமதி கேட்டதாகவும் அதற்கு விஜய் ஓகே சொல்லி இருப்பதாகவும் தகவல்.