அது வரை இது ஒரு தொடர் கதை; இதற்கு இல்லை முடிவுரை - எச்சரிக்கும் பாஜக

 
அட்

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழ்நாட்டின்  ஜமுனாமுத்தூரை சேர்ந்த  6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இரு நாட்களுக்கு முன்னர் தமிழகத்தை சேர்ந்த 55 பேர் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல வருடங்களாக ஜமுனாமுத்தூரை சேர்ந்தவர்களை ஆந்திர மாநிலம் சேஷாசல காடுகளிருந்து செம்மரம் வெட்ட கடத்தல்காரர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது என்று சொல்லும் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாரயணன் திருப்பதி,

செ

ஆந்திர மாநில காவல்துறையின் 'என்கவுண்டர்களில்' பல உயிர்களை இழந்தபோதிலும், ஆந்திர மாநில சிறைகளில் பல நூற்றுக்கணக்கானவர்கள் அடைபட்டிருந்தாலும், எதையும் பொருட்படுத்தாது இந்த குற்றச்செயல்களில் தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஈடுபடுவது இந்த குற்றத்தின் பின்னணியில் உள்ளவர்களின் பலத்தை காட்டுகிறது என்கிறார். 

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களின் ஒருசில கிராமங்களை சார்ந்தவர்களே செம்மரங்களை வெட்டுவதற்காக செல்கிறார்கள்.   அரிய வகை மரங்களான இவை சீனாவிற்கு கடத்தப்படுகின்றன.  நம் நாட்டின் சொத்தான, வெப்பத்தை தணிக்கும் இந்த செம்மரங்களை சீனா தன்னுடைய அணுஉலைகள் மூலம் ஏற்படும் புவி வெப்பமயமாகுதலை தற்காத்துக்கொள்வதற்காக பயன்படுத்துகிறது. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கடத்தல் தொழில் இது. இதை எதற்காக கடத்துகிறார்கள், இதனுடைய மதிப்பு என்ன என்பதை அரசியல் கட்சிகளும், காவல்துறையினரும் பொறுப்போடு அந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று சொல்லும் நாராயணன்,   இந்த செம்மரங்களை இழப்பதால் பருவநிலை மாற்றத்தை நாம் எதிர்கொள்ள கூடிய ஒரு மிக முக்கிய காரணியை இழக்கிறோம் என்பதை புரிய வைப்பதும் நம் கடமை. இதில் இடைத்தரகர்களின் பங்கு அதிகம். அதே போல் பல அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இதன் பின்னணியில் பெரும்பணம் பார்ப்பது உண்மை என்கிறார். 

ன்ச்

வறுமையின் காரணமாகவே இந்த மரங்களை வெட்ட அங்கு செல்கிறார்கள் என்று கூறுவதோடு, இவர்களெல்லாம் 'தமிழர்கள்'  என்று மொழி உணர்வை தூண்டி விட்டு அரசியல் குளிர் காய்வதை சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் நாடகமாடுவதை  நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆந்திர மற்றும் தமிழக காவல்துறையினர் இந்த செம்மரக்கடத்தலுக்கு பின் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கைஎடுக்க வேண்டும். இரு மாநில அரசுகளின் ஒத்துழைப்பின் மூலமே இந்த குற்றங்களை நிறுத்த முடியும் என்று அழுத்தமாக சொல்லும் நாராயணன், அது வரை இது ஒரு தொடர் கதை. இதற்கு இல்லை முடிவுரை என்கிறார்.