திருந்தாத திமுக - கொந்தளிக்கும் எச்.ராஜா
திருந்தாத திமுகவை புறக்கணிப்போம் என்று கொந்தளித்து இருக்கிறார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.
தமிழ் புத்தாண்டு குறித்த விவாதம் கடந்த பல ஆண்டுகளாகவே தீவிரமாக நடந்து வருகிறது. சித்திரையில் புத்தாண்டு கொண்டாடுவது தமிழ் வழக்கம் இல்லை. அது சமஸ்கிருத வழக்கம். தை மகளை வரவேற்கும் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பது தான் திமுகவின் நிலைப்பாடு. தமிழறிஞர்கள் பலரும் தை-1 தான் தமிழ் புத்தாண்டு என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.
சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு. . சமஸ்கிருத மாத பெயர்களில் தமிழ் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்று இன்னொரு சாரார் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் புத்தாண்டு சித்திரை தான் என்று மீண்டும் மாற்றப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழக அரசின் பொங்கல் தொகுப்புக்கான பையில் தை புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இணையங்களில் வெளியாகியுள்ள இந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பொங்கல் பரிசு பையில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் தமிழ்நாடு அரசு மீண்டும் தை ஒன்னாம் தேதியே புத்தாண்டு என்று அறிவிக்க போகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது .
இதுகுறித்து பாஜக தலைவர் எச் ராஜா எனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர், ‘’திமுக திருந்தாது. இந்துக்களின் மதநம்பிக்கை மற்றும் பண்டிகை நாட்களில் அரசு தலையிடுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது மட்டுமல்ல மதசார்பின்மைக்கு விரோதமானதுமாகும். தமிழ் புத்தாண்டு சித்திரையே. கிறித்தவர்களோ முஸ்லிம்களோ இதை கொண்டாடுவதில்லை. இது இந்து பண்டிகையே. தி.மு.க வை புறக்கணிப்போம்.’’ என்கிறார்.

