உதயநிதி கோஷம் - வெங்கையா நாயுடுவை டென்ஷன்படுத்திய திமுக எம்.பி.

 
uuu

வெல்க தளபதி, வெல்க அண்ணன் உதயநிதி என்று நாடாளுமன்றத்திற்குள் முழக்கமிட்ட தால் இதையெல்லாம் வெளியில் வைத்துக்கொள்ளுங்கள் என்று டென்ஷனாகி இருக்கிறார் துணை சபாநாயகர் வெங்கையா நாயுடு.  

 நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கூடியபோது புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட  திமுகவைச் சேர்ந்த எம். எம். அப்துல்லா,  கே. ஆர். என். ராஜேஷ் குமார், கனிமொழி சோமு ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.   மூன்று பேருமே தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்.

tt

 அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களான கேபி முனுசாமி,  வைத்திலிங்கம் ஆகியோர் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால்  மாநிலங்களவை உறுப்பினர் இடம் காலியானது.   இதையடுத்து  அந்த இடங்களுக்கான வேட்பாளர்களாக திமுக சார்பில் கனிமொழி சோமு, கேஆர்என். ராஜேஷ்குமார் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

 இவர்களை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.   அப்போது புதிதாக தேர்வானவர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

 கழகத்தின் சார்பில் திமுகவைச் சேர்ந்த  கனிமொழி சோமு,   கே ஆர் எம் ராஜேஷ் குமார் ஆகியோர்  தமிழில் பதவியேற்றுக்கொண்டனர் . பதவி ஏற்கும்போது வெல்க  தளபதி வெல்க அண்ணன் உதயநிதி என்று சொன்னார்  கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்.

 அப்போது துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு,  முழக்கங்கள் எல்லாம் குறிப்பில் சேர்க்கப்படாது.   வெளியில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் கூறிக் கொள்ளலாம் என்று டென்ஷனாக சொன்ன போது ,  ராஜேஷ்குமார் அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்தார். 

 நாடாளுமன்றத்தில் பதவியேற்பின் போது வெல்கம் உதயநிதி என்று கோஷமிட்ட ராஜேஷ்குமாரை  கலாய்த்து வருகின்றனர்