ஒரு பய இருக்கக் கூடாது...கொந்தளித்த பேரரசு

 
p

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.   இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி,  தனது டுவிட்டர் பக்கத்தில்,  ’’வெளியில் இருக்கும் எதிரியைவிட உள்ளுக்குள் இருக்கும் எதிரியால் அதிக ஆபத்து ஏற்படும். வெளியில் இருக்கும் எதிரியை நீங்கள் அழிக்கலாம். ஆனால் உள்ளுக்குள் இருக்கும் எதிரியுடன் நீங்கள் வாழ்ந்துதான் ஆக வேண்டும்’’ என்று பதிவிட்டிருந்தார்.

ct

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு ஆளாகி அவர் உயிரிழந்த நிலையில், சி.டி.ரவியின் பதிவு சலசலப்புகளை ஏற்படுத்தின.

இதன்பின்னர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி,  வீடியோபேட்டி ஒன்றில்,    சீனா, இந்தியாவிற்கு தொல்லை அளித்து வருகிறது.  சீனாவால்  நமக்கு ஒரு ஆபத்து, சீனா நமது எல்லைக்குள் வந்து விட்டது என்று கூறியவர் பிபின் ராவத் . இந்த விபத்தில்  சீனா பின்னணி இருக்கலாம்.    இது ஒரு சைபர் வார்ஃபேர் ஆக இருக்கலாம்.  லேசர் மூலமாக தொழில்நுட்ப மாறுபாடுகளை ஏற்படுத்த முடியும். இதுவும் அதுபோன்ற ஒன்றாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.   சீனா ஏற்படுத்தும் ஆபத்துகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டோம். நாம் இந்த விஷயத்தில் மிகக் கடுமையாக மறு ஆய்வு செய்ய தேவையிருக்கிறது என்கிறார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு விஷயங்களில் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

ew

தவிர, தனது டுவிட்டர் பக்கத்திலும் ,  முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. இதனால் மத்திய அரசு இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணையைத் தொடங்க வேண்டும்  என்று வலியுறுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் பேரரசு தனது டுவிட்டர் பக்கத்தில்,

நம் நாட்டில்
ஒரு கட்சிக்கு எதிரா
கோடி பேர் இருக்கலாம்!
மதத்திற்கு எதிரா
கோடிப்பேர் இருக்கலாம்!
மொழிக்கெதிரா, ஜாதிக்கு எதிரா
பல கோடிப்பேர் இருக்கலாம்
ஆனால்
நம் இந்தியாவிற்கு எதிரா
ஒரு பய இருக்கக் கூடாது!
அவர்களை கண்டறிந்து
இந்த நாட்டைவிட்டே துரத்துவது
அரசின் கடமையாகும்!
ஜெய்ஹிந்த்

- என்று பதிவிட்டிருக்கிறார்.