’’முதல்வர் சொல்லும் வெளிப்படைத்தன்மையான நிர்வாகம் விரைவில் சாத்தியமாகும்’’

 
mo

வெளிப்படைத்தன்மையான நிர்வாகம் என்று  முதல்வர் குறிப்பிடுவது  கணினிமயமாதல் மூலம் விரைவில் சாத்தியமாகும் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ் 

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் நுண்ணரங்கு -21 எனும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு மாநாட்டினை  தொடங்கிவைத்து பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

moo

மக்கள் வசதிக்கும், பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், இணைய வழி சேவைகளை மேம்படுத்தவும், தமிழ்நாட்டில் உள்ள 10,800க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்களில் அரசு ஆதார் வாயிலான பரிவர்த்தனைகளை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தொழில்நுட்பவியல் துறையில் செயற்கை நுண்ணறிவு பெறும் பங்கு வகித்து வரும் நிலையில் இதன் மூலம் மக்களுக்கான சேவைகளை வழங்குதல் மின் ஆளுமை எவ்வாறு செயல்படுத்துவது என்பது தொடர்பான துறை வல்லுனர்கள் ஆய்வாளர்களுடனான கருத்தரங்கு நடைபெறுகிறது என்று தெரிவித்தவர்,  

வருங்காலங்களில் இத்துறைக்கு தேவையான முன்னெடுப்புகளை விரைந்து செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தமிழகத்தை நவீனமயமாக்கும் முனைப்பில் முதல்வர் தொழில்துறை உடன் இணைந்து பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தெரிவித்திருக்கிறார். 

ooo

கூடிய விரைவில் அனைத்து சேவைகளும் நவீனமயமாக்கப்படும். முதல்வர் அவர்கள் அறிவித்த டிஜிட்டல் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளும் கணினி மயமாகும். இது வெகுவிரைவில் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த 10ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பவியல் துறை முறையாக செயல் படுத்தப்படவில்லை. இ-சேவை மூலமாக பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. சில திட்டங்களில் உள்ள சவால்கள் சரிசெய்யப்படும் என்று தெரிவித்தவர்,   ஆறு  மாத காலத்தில் எல்காட் நிறுவனத்தில் வியூகம் அமைத்து பணிகள் நடைபெறுகிறது. வெளிப்படைத்தன்மையான நிர்வாகம் என்பதை முதல்வர் குறிப்பிடுகிறார். அது கணினிமயமாதல் மூலம் விரைவில் சாத்தியமாகும் என்று தெரிவித்திருக்கிறார்.