அன்று லல்லுபிரசாத் செய்ததை இன்று மு.க.ஸ்டாலின் செய்ய வேண்டும் - திருமுருகன்காந்தி

 
ச்ட்

 அரியலூர் மாணவி மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்த பட்டதால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பாஜக, அதனால் அம்மாணவியின் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றது.

சிபிஐ விசாரணை வேண்டும் என்று மாணவியின் தந்தையும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ட்

 இந்த நிலையில் மாணவியின் தற்கொலை விவகாரம் குறித்து நேரில் விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதற்காக நான்கு பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அமைத்திருக்கிறார்.  இந்த நான்கு பேர் குழுவில் பாஜக மத்திய பிரதேச மாநில பாஜக துணைத் தலைவர் சந்தியா ரே எம்பி,  முன்னாள் பாஜக மகளிரணி செயலாளரும் நடிகையுமான விஜயசாந்தி,  மகாராஷ்டிரா மாநில பாஜக துணைத் தலைவரும் மகளிர் உரிமைப் போராளியுமான சித்ரா தாய் வாக் , கர்நாடக மாநில மகளிர் அணி தலைவர் கீதா விவேகானந்தா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  இந்த நான்கு பேரும் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி விரைந்து அறிக்கை தாக்கல் செய்ய ஜேபி நட்டா அறிவுறுத்தி இருக்கிறார். 

ப்ஜ்

இந்த நிலையில்,  மைக்கேல்பட்டி மரணத்திற்காக பாஜக அமைத்திருக்கிற பிற மாநில உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி தமிழகத்திற்குள் வர அனுமதிக்கப்படக்கூடாது. அவர்களது வருகைக்கு தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கமுண்டு என்கிறார் மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி.

அவர் மேலும்,  தமிழக அரசு இக்குழு இங்கே நுழைவதற்கு தடைவிதிக்க வேண்டும். பாஜக அத்வானியின் ரதயாத்திரையை பீகாரில் தடுத்து நிறுத்தினார் லல்லுபிரசாத். அதே போன்று இந்த மதவெறி கமிட்டிகள் தமிழகத்தில் நுழைவது தடுக்கப்படவேண்டும். தமிழகத்திற்குள் அவர்கள் அனுமதிக்கப்பட்டால் மே17 இயக்கம் இவர்களுக்கு எதிரான சனநாயக போராட்டத்தில் இறங்கும். ஆரிய இந்துத்துவவெறிக்கு தமிழகத்தில் இடமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.