’’வாரிசு அரசியல் என்று இதை தான் சொல்கிறோம்’’

 
u

தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதியில் சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 4 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.   2019- 2020 ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.  82 லட்சம் மதிப்பீட்டில் இந்த வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

 இதை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.  சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம்,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தனர்.

se

மத்திய அரசின், பாராளுமன்ற மேம்பாட்டு நிதியின் தென் சென்னை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட கட்டடம். இதை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தி. நகரில் திறந்து வைத்தது ஏன்? வாரிசு அரசியல் என்று இதை தான் சொல்கிறோம் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் தமிழக பாஜக செய்திதொடர்பாளர்  நாராயணன் திருப்பதி.