இதுதான் காங்கிரசின் கொள்கை - 5 மாநில மக்களுக்கு தெரிவிக்க எச்.ராஜா முடிவு

 
ஹ்

ஸனாதன தர்மம் என்பது சமூகத்தில் நிலவும் வேறுபாடுகளை நியாயப்படுத்துகிறது்.  இது இந்து மதத்தில் ஏற்பட்ட இடைசெருகள்.  எந்த நாகரிக சமூகமும் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.  இதுதான் காங்கிரசின் கொள்கை.  இராஜா இக்கருத்தை வீடு தோறும் கொண்டு சேர்ப்பத்தில் மகிழ்ச்சி என்று தெரிவித்திருந்தார் காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்மாநில தலைவர் .

ks

அதற்கு தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,  ‘’சனாதன தர்மம் மதம் அல்ல.  வாழும் முறை. பண்பாடு, நம்பிக்கை. அதிலிருந்து வந்த இடைச்செருகல் தான் ஹிந்து மதம். ஹிந்து என்பது ஒரு மதமே அல்ல. ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து வேறுபாட்டை உருவாக்கியது காங்கிரஸ். மகாத்மா காந்தி தான் ஒரு சனாதன ஹிந்து என்றார்.  அவரை அநாகரீகமானவர் என்கிறாரா  கே.எஸ்.அழகிரி?’’என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  ‘’இத்தாலிய சோனியாவின் தமிழக தலைவரிடமிருந்து இந்து விரோதத்தை தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.   இதே மாதிரி பேச ராகுலுக்கு துணிவுன்டா.   உபி தேர்தலில் ராகுல் பேசுவாரா.  உங்களின் இந்த இந்துவிரோதப் பேச்சு (காங்கிரஸின் நிலைப்பாடு) மொழி பெயர்க்கப் பட்டு முதலில் 5மாநில மக்களுக்கு தெரிவிப்போம்’’என்று சொல்லி இருக்கிறார்.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு  விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது.    15 நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.  இந்த 5 மாநில தேர்தலில் தான்முதலில் மொழிபெயர்த்து பிரச்சாரம் செய்யப்போவதாக தெரிவித்திருக்கிறார் எச்.ராஜா.