இதுதான் அரசியல் நாகரீகம்! பாஜகவை நெகிழவைத்த திமுக பிரமுகர்

 
ட்ப்

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டார பகுதிகளில் மழை பெய்தால்தான் நிரம்பும்.   இந்த பகுதி விவசாயிகள் நிரந்தர நீராதாரம் பெறும் வகையில் சாப்டூர் சதுரகிரி மலையிலிருந்து வரும் மழை நீரைத் தேக்கும் வகையில் டேரா பாறை அணை கட்டும் திட்டத்தை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டனர்.  இந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது.   ஒவ்வொரு ஆண்டும் திட்ட மதிப்பீடு கூடிக்கொண்டே வரும் நிலையில் இதை செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

ட்

இந்நிலையில்,   பேரையூர் தாலுகாவில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.    அந்த போஸ்டரில்,  ‘’ மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை திட்டமான டேரா பாறை அணைக்கட்டு கட்டுவதற்கு முழு முயற்சி எடுத்த சிலார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் டி.ஞானசேகரன் அவர்களது கோரிக்கையை ஏற்று,   இத்திட்டத்திற்கு வேண்டிய நிதி ஒதுக்குவது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் அவர்களுக்கு பரிந்துரை செய்து உத்தரவு பிறப்பித்த பாரதப் பிரதமர் அவர்களுக்கு நன்றி ’’என்று தெரிவித்திருக்கிறார் .  

அந்த போஸ்டரில் மேலும்,   இப்படிக்கு விவசாய பெருமக்கள் பேரையூர் தாலுகா,  மதுரை மாவட்டம் என்றும் டி.ஞானசேகரன் , ஊராட்சி மன்றத்தலைவர்,சிலார்பட்டி ஊராட்சி, டி. கல்லுப்பட்டி ஒன்றியம்,  பேரையூர் தாலுகா , மதுரை மாவட்டம் என்றும் இருக்கிறது.

தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இதை சுட்டிக்காட்டி,  ‘’ஊராட்சியளவில்  துவங்கியுள்ள இந்த நாகரீக அரசியல் தேசிய அளவில் பெருகட்டும். கட்சிகளை தாண்டி மக்கள் நலன் முக்கியம் என்பதை உணர்த்திய  ஞானசேகரன் அவர்களுக்கு பாராட்டுகள் ‘’ என்று தெரிவித்திருக்கிறார்.