இப்படித்தான் நாலு கெட்டவர்கள் வருவார்கள் -ஜெ., உதவியாளர் சூசகம் - வைரலாகும் வீடியோ

 
பொ பொ

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன் சங்கரலிங்கம்.  ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர்  அரசியலை விடவும் ஆன்மிகத்தில் அதிகம் நாட்டம் கொண்டிருந்தாலும், அவ்வப்போது அரசியல் பக்கம் தன் கருத்துக்களை மட்டும் அனுப்புவதுண்டு.  அப்படித்தான் தற்போதும் சூசகமாக ஒரு கருத்தினை வீடியோ மூலமாக தெரியப்படுத்தி இருக்கிறார்.

அந்த வீடியோவில்,  ‘’ஒரு கிராமத்திற்கு வந்திருந்த சாமியார், பொய் பேசாதீர்கள்.  நல்லதை செய்யுங்கள்.  உண்மையை பேசுங்கள். திருடாதீர்கள். ஒருவருக்கு ஒருவர் சமாதானமாக இருங்கள். சாதி, மத பேதம் எல்லாம் கூடவே கூடாது என்றெல்லாம் அறிவுரை வழங்கினார்.

அந்த சாமியாரின் பேச்சை கேட்டு அவ்வூர் மக்களும் அமைதியாக இருந்தார்கள்.  இது பக்கத்து ஊரில் இருந்த ஒரு வாலிபனுக்கு வெறுப்பை தந்தது.   நம்ம ஊரெல்லாம் கெட்டு கெடக்கே...அந்த ஊர் மட்டும் எப்படி அமைதியாக இருக்கிறது  என்று  யோசித்தார்.  இதை கெடுக்க வேண்டும் என்றால் அந்த சாமியாரின் பேரை கெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

போஒ

கெட்ட எண்ணத்துடன் அந்த கிராமத்திற்கு சென்றார்.  மக்களே.. இங்கு வந்திருக்கும் சாமியார் ஏதேதோ சொல்லி உங்கள் மனதை மாற்ற பார்க்கிறார்.  உங்களை சோம்பேறிகள் ஆக்குகிறார்.  உங்களுடைய தைரியத்தை குறைக்கிறார்.  என்னால் தண்ணீரில் கூட நடக்க முடியும்? நான் தண்ணீரில் நடந்து காட்டினால் இனி என் பேச்சை கேட்பீர்களா?  என்று கேட்க, அவ்வூர் மக்களும் சரி என்று தலை ஆட்டினார்கள்.

ஆற்றங்கரைக்கு அனைவரும் சென்றார்கள். அவன் தண்ணீரில் மூழ்காமல் இருப்பதற்கான ஆடைகளை அணிந்துகொண்டிருந்தான்.  தண்ணீரில் ஒய்யாரமாக அக்கறைக்கு சென்று திரும்பி வந்தான். இதைப்பார்த்த ஊர்மக்கள் வெகுவாக அவனை பாராட்டினார்கள்.

உடனே, சாமியாரை பார்த்து உங்களால்  சொல்லத்தான் முடிகிறது. ஆனால்  எங்களுக்கு வேண்டியதை அவரால் பெற்றுத்தர முடியுமே என்று சொல்லி இருக்கிறார்கள்.    அடப்பாவிகளே இதுவா பிரமாதம். அவன் செய்த வேலை  ஒரு ரூபாய்க்கு சமம்.  ஒரு ரூபாய்  அவன் கொடுத்திருந்தால் ஆடை கூட நனையாமல் அக்கறைக்கு அவன் சென்றுக்கலாம்.  அதோடு அவன் அணிந்திருத ஆடையை மற்றொருவனுக்கு கொடுத்து தண்ணீரில்  நடக்கச்சொன்னான்.  அவனும் அசாதாரணமா நடந்து சென்றான்.

இப்படித்தான் நல்லவர்களின் பெயர்களை கெடுப்பதற்காக நாலுகெட்டவர்கள் வரத்தான் செய்வார்கள்.  நீங்கள்தான் இனம் கண்டு ஒதுக்க வேண்டும்.  புரிகிறதா நன்பர்களே! நன்றி வணக்கம்.’’ என்று பேசியிருக்கிறார்.

ஜய

முன்னதாக,  ஜெயலலிதாவுடன்  தானும் தந்தையும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு,  ‘’சிங்கத்தோடு சிறுவயதில் என்னை பார்க்க எனக்கே ஆச்சரியம். அமைதியாக இருப்பதால் சிலர் என்னை சீண்டிப் பார்க்க நினைக்கிறார்கள். நான் பாடம் பயின்றது இரும்பு பெண்மணியிடம்… யாருக்கு பதில் சொல்ல வேண்டும்; எப்போது பதில் சொல்ல வேண்டும் என்று அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். பிடித்ததை செய்து கொண்டிருக்கும் என்னை பிடிக்காததை செய்ய வைத்துவிடாதீர்கள். அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.” என்று சொல்லியிருந்தார் பூங்குன்றன் சங்கரலிங்கம்.