இந்த CMதான் அடுத்த PMஆக ஆசையாம் - பாஜக கடும் விமர்சனம்

 
ச்

தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜனவரி 26ஆம் தேதியன்று சுதந்திர தினம் என்று பதிவிடப்பட்டிருக்கிறது.   வருடத்தின் முக்கிய நாட்கள் குறித்த பக்கத்தில் இந்த பதிவு இடம்பெற்றிருக்கிறது.

tn

 இதை அடுத்து தமிழக பாஜக பொருளாளர் எஸ். ஆர். சேகர் இது குறித்து கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.  அவர்,  
’’அதிமேதாவி
விடியல் அரசு
ஜனவரி 26
சுதந்திர தினமாம்.

இந்த CM தான்
அடுத்த PM ஆக ஆசையாம்

எழுந்திருக்கவே
2 பேர் தூக்கிவிடணுமாம்
இதுல......’’

- என்று தெரிவித்திருக்கிறார்.

srs

 நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு. க. ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார்.  அவர் முதல்வராக பதவியேற்று சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என்றும்,  அடுத்த பிரதமர் ஆவதற்கு உரிய தகுதி அவருக்கு இருக்கிறது என்றும்,  திமுகவினரும் ஆதரவாளர்களும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.  இந்த நிலையில்தான்  இப்படி ஒரு தவறை சுட்டிக்காட்டி இவ்வாறு விமர்சித்திருக்கிறார் எஸ். ஆர். சேகர்.