‘’அரசியல் தலைவர் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு உதாரணம் திருமாவளவன் ’’

 
t

வெள்ள சேதத்தை உணர்த்திட படகில் சென்ற அண்ணாமலையை   உள்நோக்கத்தோடு  விமர்சனம் செய்தவர்கள், இந்த நிகழ்விற்கு வாய் மூடி அமைதி காக்கக்தான் செய்வார்கள். இது தான் தமிழக அரசியல் என்கிறார் தமிழைக பாஜகசெய்தி தொடர்பாள  நாராயணன் திருப்பதி,  

தொடர் கன மழையினால்  சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.   வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது.  கீழ் தளங்களில் குடியிருப்போர் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் புகுந்துவிட்டது . அவர் வெளியே காரில் ஏறி செல்ல வேண்டும் என்பதற்காக அவருடன் இருப்பவர்கள் வரிசையாகச் நாற்காலியை வைக்க அதி ஏறி வருகிறார் திருமாவளவன்.  பின்னர் நாற்காலியின் மேல் திருமாவளவன் நின்றுகொண்டிருக்க,  அவருடன் இருப்பவர்கள் அந்த நாற்காலியை  இழுத்துக் கொண்டு செல்கிறார்கள்.


இதற்குத்தான் நாராயணன் திருப்பதி அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.  அவர் மேலும்,  தன் வீட்டிலிருந்து வெளியே வந்து தன் காலணி தண்ணீரில் நனைந்து விடா  வண்ணம் பலருடைய உடலுழைப்பை உபயோகித்து சேர்களில் நடந்து வந்து திருமாவளவன் அவர்கள் காரில் ஏறி அமர்ந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு அரசியல் தலைவர் எவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு உதாரணம் திருமாவளவன்.

இனி, அரசியலில் எளிமை, தூய்மை என்ற கருத்துகளை சொல்லும் தார்மீக உரிமையை இழந்து விட்டார் திருமாவளவன் அவர்கள். அதே போல், ஒடுக்கப்பட்டவர்களுக்காக இருப்பதாக சொல்லிக்கொண்டு, தொண்டர்களின் உடலுழைப்பை உறிஞ்சிய அவரின் செயலை கண்டிக்காத அரசியல்வாதிகள் இனி  தங்களை தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை இழந்து விட்டார்கள். பல ஊடகங்கள் இது குறித்து மௌனம் காப்பது அவற்றின் நடுநிலைத் தன்மையை தோலுரித்து காட்டி விட்டது. சமூக அநீதியின் முத்திரை. மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். காலம் பதில் சொல்லும்  என்கிறார்.